சுடச்சுட

  

  சென்னை ஓபன்: காலிறுதியில் சிலிச், பெர்டிச்

  By ஏ.வி.பெருமாள்  |   Published on : 03rd January 2013 11:16 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  somanath

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் குரோஷியாவின் மரின் சிலிச், செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச் ஆகியோர் காலிறுதிக்கு முன்னேறினர்.

  மரின் சிலிச் முதல் செட்டை 4-6 என்ற கணக்கில் இழந்தபோதும், அடுத்த இரு செட்களையும் 6-2, 6-3 என்ற கணக்கில் கைப்பற்றியதன் மூலம் உக்ரைனின் செர்ஜி ஸ்டக்கோவ்ஸ்கியை வீழ்த்தினார்.

  தாமஸ் பெர்டிச் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் இந்தியாவின் சோம்தேவை தோற்கடித்தார். இதன்மூலம் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக யூகி பாம்ப்ரி முதல் சுற்றிலும், பிரகாஷ் அமிர்தராஜ் காலிறுதிக்கு முந்தைய சுற்றிலும் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

  18-வது சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 4-வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் முன்னாள் சாம்பியனான குரோஷியாவின் மரின் சிலிச்சும், உக்ரைனின் செர்ஜி ஸ்டக்கோவ்ஸ்கியும் மோதினர். முதல் செட்டின் முதல் கேமில் சர்வீஸ் போட்ட மரின் சிலிச், சற்று போராடியே தனது சர்வீûஸ தன்வசமாக்கினார்.

  அடுத்த கேமில் ஸ்டக்கோவ்ஸ்கி இரு அதிரடி ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். இதன்மூலம் அவர் தனது சர்வீûஸ மீட்டார். 3-வது கேமில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்திய சிலிச், மிக எளிதாக தனது சர்வீûஸ தன்வசமாக்கினார். 7-வது கேமில் யாரும் எதிர்பாராத வகையில் மரின் சிலிச்சின் சர்வீûஸ முறியடித்து 4-3 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் ஸ்டக்கோவ்ஸ்கி. 8-வது கேமில் தனது சர்வீஸில் இரு டபுள்பால்ட் தவறை செய்தபோதும், சரிவிலிருந்து மீண்டார் ஸ்டக்கோவ்ஸ்கி. இதனால் முதல் செட் 38 நிமிடங்களில் 6-4 என்ற கணக்கில் ஸ்டக்கோவ்ஸ்கி வசமானது.

  பின்னர் நடைபெற்ற 2-வது செட்டில் ஆரம்பம் முதலே சிறப்பாக ஆடினார் மரின் சிலிச். சிலிச்சின் ஷாட்களைக் கணிக்க முடியாமல் ஸ்டக்கோவ்ஸ்கி தடுமாறினார்.

  இதனால் 2-வது கேமிலேயே ஸ்டக்கோவ்ஸ்கிக்கு பின்னடைவு ஏற்பட்டது. இதனால் தனது சர்வீûஸ மரின் சிலிச்சிடம் இழந்தார். 4-வது கேமில் மீண்டும் ஸ்டக்கோவ்ஸ்கியின் சர்வீûஸ பிடிக்க முயன்றார் மரின் சிலிச். எனினும் கடுமையாகப் போராடிய ஸ்டக்கோவ்ஸ்கி தனது சர்வீûஸ மீட்டார்.

  இதன்பிறகு ஸ்டக்கோவ்ஸ்கி 6-வது கேமில் தனது சர்வீûஸ தக்கவைத்தாலும், 8-வது கேமில் தனது சர்வீûஸ சிலிச்சிடம் இழப்பதிலிருந்து தப்ப முடியவில்லை. இதனால் அந்த செட் 6-2 என்ற கணக்கில் மரின் சிலிச் வசமானது. இந்த செட் 32 நிமிடங்கள் நீடித்தது.

  இதன்பிறகு நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் முதல் கேமில் கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீûஸ மீட்ட சிலிச், அடுத்த கேமில் ஸ்டக்கோவ்ஸ்கியின் சர்வீûஸ முறியடித்து 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு ஆக்ரோஷமாக ஆடிய சிலிச், அவ்வப்போது ஏஸ் சர்வீஸ்களை அடித்து, ஸ்டக்கோவ்ஸ்கியை நிலைகுலையச் செய்தார். இதனால் ஸ்டக்கோவ்ஸ்கியின் தோல்வி தவிர்க்க முடியாததானது. 9-வது கேமில் இரு ஏஸ் சர்வீஸ்களை அடித்த சிலிச், 36 நிமிடங்களில் அந்த செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். இதனால் அந்த செட் 6-3 என்ற கணக்கில் சிலிச் வசமானது. இதன்மூலம் மரின் சிலிச் 4-6, 6-2, 6-3 என்ற செட் கணக்கில் வெற்றிபெற்று காலிறுதிக்கு முன்னேறினார். ஸ்டக்கோவ்ஸ்கி 5 முறை டபுள் பால்ட் தவறுகளை செய்தார். ஆனால் மரின் சிலிச் ஒரெயாரு டபுள் பால்ட் தவறு மட்டுமே செய்தார். அதேநேரத்தில் 13 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் பிரான்ஸின் பெனாய்ட் பெய்ரேவைச் சந்திக்கிறார் மரின் சிலிச்.

  முன்னதாக பெனாய்ட் பெரே தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-1, 6-0 என்ற நேர் செட்களில் இஸ்ரேலின் டூடி செலாவை வீழ்த்தினார்.

  சோம்தேவ் தோல்வி: மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் வைல்டுகார்ட் வீரரான சோம்தேவ், போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளவரும், சர்வதேச தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ளவருமான செக்.குடியரசின் தாமஸ் பெர்டிச்சை எதிர்கொண்டார்.

  முதல் செட்டின் தொடக்கத்தில் தாமஸ் பெர்டிச்சின் சர்வீûஸ எதிர்கொள்ள முடியாமல் தடுமாறினார் சோம்தேவ். இதனால் முதல் கேமில் சிக்கலின்றி தனது சர்வீûஸ தன்வசப்படுத்திய பெர்டிச், 4-வது கேமில் சோம்தேவின் சர்வீûஸ எளிதாக முறியடித்தார். ஆடுகளம் முழுவதும் சோம்தேவை ஓடவைத்து திணறடித்தார் பெர்டிச். எனினும் 8-வது கேமில் கடுமையாகப் போராடிய சோம்தேவ், நூலிழையில் தனது சர்வீûஸ மீட்டார். எனினும் அடுத்த கேமில் தனது சர்வீûஸ தன்வசப்படுத்தி முதல் செட்டை 37 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார் பெர்டிச். இதனால் அந்த செட் 6-3 என்ற கணக்கில் பெர்டிச் வசமானது.

  இரண்டாவது செட்டின் தொடக்கத்தில் பெர்டிச்சுக்கு நல்ல சவால் அளித்தார் சோம்தேவ். எனினும் பெர்டிச்சின் அதிவேக ஆட்டத்துக்கு முன்னால் சோம்தேவின் போராட்டம் நீண்ட நேரம் எடுபடவில்லை. இதனால் 3-வது கேமில் சோம்தேவின் சர்வீûஸ முறியடித்த பெர்டிச் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு 5 மற்றும் 7-வது கேம்களிலும் சோம்தேவின் சர்வீஸ் பெர்டிச்சிடம் எடுபடவில்லை. அந்த இரு கேம்களிலும் சோம்தேவின் சர்வீûஸத் தகர்த்த பெர்டிச், 7 கேம்களிலேயே இந்த செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார். 27 நிமிடங்கள் மட்டுமே நடைபெற்ற இந்த செட் 6-1 என்ற கணக்கில் பெர்டிச் வசமானது.

  2011 சென்னை ஓபனில் அரையிறுதி வரை முன்னேறியவரான பெர்டிச், வெள்ளிக்கிழமை நடைபெறும் காலிறுதியில் ஸ்பெயினின் ராபெர்ட்டா பாக்தாதிûஸ சந்திக்கிறார். முன்னதாக ராபெர்ட்டா தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 7-6 (4), 6-3 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் மேத்யாஸ் பச்சின்ஜரை வீழ்த்தினார்.

  அரையிறுதியில் ஆன்ட்ரே-மார்ட்டின் ஜோடி: இரட்டையர் பிரிவு காலிறுதிச் சுற்றில் ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான்-மார்ட்டின் எம்ரிச் ஜோடி 7-6 (4), 6-1 என்ற நேர் செட்களில் ஸ்லோவேனியாவின் அலிஜாஸ் பெடேன்-பிளாஸ் காவ்சிச்சை ஜோடியை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai