சுடச்சுட

  

  சென்னை ஓபன்: போராடி வீழ்ந்தார் அமிர்தராஜ்

  By - ஏ.வி.பெருமாள் -  |   Published on : 03rd January 2013 12:43 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜ் போராடி தோல்வி கண்டார்.

  கடுமையாகப் போராடிய அவர் 6-7 (2), 6-3, 4-6 என்ற செட் கணக்கில் ஜப்பானின் கோ ஸூய்டாவிடம் வெற்றி வாய்ப்பை இழந்தார்.

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டி சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. போட்டியின் 3-வது நாளான புதன்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பிரகாஷ் அமிர்தராஜும், முன்னணி வீரரும், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ளவருமான ஜப்பானின் கோ ஸூய்டாவும் மோதினர். முதல் செட்டின் முதல் கேமில் சர்வீஸைப் போட்ட பிரகாஷ், மோசமான ஷாட்களை கையாண்டதால் அந்த சர்வீஸை ஸூய்டாவிடம் இழந்தார். அடுத்த கேமில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸூய்டா தனது சர்வீஸை தன்வசமாக்கினார். 3-வது கேமிலும் பிரகாஷ் பெரும் பின்னடைவை சந்தித்தார்.

  இதனால் இதிலும் அவர் சர்வீஸை இழப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 2 ஏஸ் சர்வீஸ்களை அடித்து தனது சர்வீஸை மீட்டார். அடுத்த கேமில் அபாரமாக ஆடிய பிரகாஷ், ஸþய்டாவின் சர்வீûஸ தகர்த்தார். இதனால் இருவரும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டினர். 

  5-வது கேமில் தனது சர்வீஸில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய பிரகாஷ், அடுத்த கேமில் ஆக்ரோஷமாக ஆடி மீண்டும் ஸூய்டாவின் சர்வீஸை முறியடித்து 4-2 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றார்.

  8 கேம்களின் முடிவில் 5-3 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்த பிரகாஷ் முதல் செட்டைக் கைப்பற்றுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், 9-வது கேமில் தனது சர்வீஸை இழந்தார். இதுதான் இந்த செட்டில் திருப்புமுனையாக அமைந்தது. இதன்பிறகு இந்த செட் 6-6 என்ற கணக்கில் சமநிலையில் முடியவே, டைபிரேக்கருக்கு சென்றது.

  டைபிரேக்கர் செட்டில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய ஸூய்டா, அடுத்தடுத்து பிரகாஷின் சர்வீஸை முறியடித்து 4-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். கடைசி நேரத்தில் பிரகாஷ் போராடியபோதும் பலனளிக்கவில்லை. இதனால் ஸþய்டா 7-2 என்ற கணக்கில் டைபிரேக்கர் செட்டை கைப்பற்றினார். இதனால் முதல் செட் 7-6 (2) என்ற கணக்கில் ஸþய்டா வசமானது. இந்த செட் 58 நிமிடங்கள் நீடித்தது.

  முதல் செட்டில் தோற்றபோதும், இரண்டாவது செட்டில் போராட்டத்தைக் கைவிடாத பிரகாஷ், 3-வது கேமிலேயே ஸூய்டாவின் சர்வீஸை முறியடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார்.

  இதையடுத்து சுதாரித்துக் கொண்ட ஸூய்டா, அடுத்த கேமில் பிரகாஷின் சர்வீஸை முறியடிக்க கடுமையாகப் போராடினார். இதனால் இது டியூஸ் வரை சென்றது. எனினும் சிறப்பாக ஆடிய பிரகாஷ், தனது சர்வீஸை மீட்டார். 7 கேம்களின் முடிவில் 4-3 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்ற பிரகாஷ், 8-வது கேமில் கடும் போராட்டத்துக்குப் பிறகே தனது சர்வீஸை தன்வசமாக்கினார். அடுத்த கேமில் அபாரமாக ஆடிய பிரகாஷ், மிக எளிதாக ஸூய்டாவின் சர்வீஸை முறியடிக்க 2-வது செட் 9 கேம்களிலேயே முடிவுக்கு வந்தது. 44 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட்டை பிரகாஷ் 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் 6-வது கேமில் ஸþய்டாவின் சர்வீஸை முறியடிக்கும் வாய்ப்பை நூலிழையில் தவறவிட்ட பிரகாஷ், 9-வது கேமில் தனது சர்வீஸை ஸூய்டாவிடம் இழந்தார். இந்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட ஸூய்டா, அடுத்த கேமிலேயே ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார். 46 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட் 6-4 என்ற கணக்கில் ஸூய்டா வசமானது. பிரகாஷ் தகுதிச்சுற்றின் மூலம் பிரதான சுற்றுக்கு முன்னேறியிருந்தாலும், முன்னணி வீரரான ஸூய்டாவுக்கு கடும் சவால் அளித்தார். கடும் சவாலுக்குப் பிறகே ஸூய்டா வெற்றி கண்டார்.

  பிரகாஷின் பேக் ஹேண்ட் ஷாட்கள் அவருக்கு மிகப்பெரிய பலமாக அமைந்தன. அதிகபட்சமாக 210 கி.மீ. வேகம் வரை சர்வீஸ் அடித்த பிரகாஷ், சில மோசமான ஷாட்களை ஆடினார். அதிவேகமான ஷாட்களை ஆட முற்பட்டு, பந்துகளை அவ்வப்போது எல்லைக்கோட்டு வெளியில் அடித்ததுதான் அவருக்குப் பின்னடைவாக அமைந்தது. முதல் சுற்று, காலிறுதிக்கு முந்தைய சுற்று என இரு ஆட்டங்களிலுமே சுமார் 2.30 மணி நேரம் விளையாடியதோடு, ஆட்டத்தை 3 செட்கள் வரை கொண்டு சென்றார் பிரகாஷ்.

  கடந்த முறை அரையிறுதி வரை முன்னேறியவரான ஸþய்டா, இந்த முறை தனது காலிறுதிச் சுற்றில் கடந்த முறை இறுதிச்சுற்று வரை முன்னேறியவரும், போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் உள்ளவருமான ஜான்கோ டிப்சரேவிச்சை சந்திக்கவுள்ளார்.

  முன்னதாக டிப்சரேவிச் தனது காலிறுதிக்கு முந்தைய சுற்றில் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் பிரான்ஸின் ரோஜர் வேஸலினை வீழ்த்தினார்.

   

  ராபின் ஹேஸி தோல்வி

  மற்றொரு ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் தரவரிசையில் 56-வது இடத்தில் உள்ளவரான நெதர்லாந்தின் ராபின் ஹேஸி 5-7, 3-6 என்ற நேர் செட்களில் தரவரிசையில் 86-வது இடத்தில் உள்ள ஸ்லோவேனியாவின் அலிஜாஸ் பெடேனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார்.

  காலிறுதியில் சோம்தேவ்

  இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சோம்தேவ்-உக்ரைனின் செர்ஜி ஸ்டாகோவ்ஸ்கி ஜோடி 7-5, 6-3 என்ற நேர் செட்களில் முன்னணி ஜோடியான நெதர்லாந்தின் ராபின் ஹேஸி-இகர் சிஸ்லிங் ஜோடியை வீழ்த்தியது. இதன்மூலம் சோம்தேவ் ஜோடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. சோம்தேவ் ஜோடி தங்களின் காலிறுதியில் தென் ஆப்பிரிக்காவின் ரவென் கிளாசென்-அமெரிக்காவின் நிகோலஸ் மான்ரூ ஜோடியை சந்திக்கிறது. இந்த ஜோடி தங்களின் முதல் சுற்றில் 6-3, 6-1 என்ற நேர் செட்களில் ஸ்பெயினின் ராபெர்ட்டா பெüதிஸ்டா-இத்தாலியின் பிளேவியா சிபோலா ஜோடியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai