சுடச்சுட

  
  bertich

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் சோம்தேவ் தேவ்வர்மனை கவனமாக எதிர்கொள்வேன் என்று தரவரிசையில் 6ஆவது இடத்தில் உள்ளவரும் செக்.குடியரசு வீரருமான தாமஸ் பெர்டிச் தெரிவித்துள்ளார்.

  சென்னை ஓபன் போட்டியில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள ஒற்றையர் போட்டியின் இரண்டாவது சுற்றில் சோம்தேவும், பெர்டிச்சும் மோதவுள்ளனர். இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களுக்கு

  பெர்டிச் அளித்த பேட்டியில் கூறியதாவது: சோம்தேவ் தனது சொந்த நாட்டில் விளையாடுகிறார். அவரை இப்போதுதான் முதன்முறையாக சந்திக்கிறேன். அதனால் மிக கவனமான அவரை எதிர்கொண்டு ஆடுவேன். ஆட்டத்தின்போது எனது திட்டங்களை சிறப்பாக செயல்படுத்த முயற்சிப்பேன்.

  போட்டியின் கடைசி புள்ளி வரை உற்சாகத்துடனே விளையாடுவேன். ஒரு போட்டியில் விளையாடும்போது காயம் ஏற்படாமல் முடிந்தவரை விளையாட முயற்சிப்பேன் என்று தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai