சுடச்சுட

  

  தென் ஆப்பிரிக்கா டெஸ்ட்: 45 ரன்களில் சுருண்டது நியூஸிலாந்து

  By dn  |   Published on : 03rd January 2013 05:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 19.2 ஓவர்களில் 45 ரன்களுக்கு சுருண்டது.

  தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலாண்டர் 6 ஓவர்கள் பந்து வீசி 7 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

  பின்னர் விளையாடிய தென் ஆப்பிரிக்கா 3 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்துள்ளது. அணியின் ஆல்விரோ பீட்டர்சன் சிறப்பாக விளையாடி ஆட்டமிழக்காமல் 103 ரன்கள் எடுத்துள்ளார்.வியாழக்கிழமை இரண்டாவது நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

  300 விக்கெட்டுகள்: தென் ஆப்பிரிக்க வேகப் பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இப்போட்டியில் 2 விக்கெட் எடுத்ததன் மூலம் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.  61 போட்டிகளில் அவர் இச்சாதனையை நிகழ்த்தினார்.

  இதனால் குறைந்த போட்டிகளில் 300 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய வரிசையில் மூன்றாவதாக இடம் பிடித்தார் ஸ்டெயின். இதற்கு முன் ஆஸ்திரேலியாவின் டென்னிஸ் லில்லி 56 போட்டிகளிலும், இலங்கையின் முரளிதரன் 58 போட்டிகளிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.

  1974ஆம் ஆண்டுக்குப் பிறகு இப்போதுதான்  டெஸ்ட் போட்டியில் ஒரு அணி 45 ரன்களுக்கும் குறைவாக ஆட்டமிழந்துள்ளது. 1974ஆம் ஆண்டில் இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 42 ரன்களில் ஆட்டமிழந்தது குறிப்பிடத்தக்கது.

   

  13,000 ரன்கள்

  இந்த ஆட்டத்தில் 20 ரன்கள் எடுத்திருந்த போது டெஸ்ட் போட்டியில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனை புரிந்தார் காலிஸ். இதன்மூலம் சர்வதேச அளவில் 13 ஆயிரம் ரன்களைக் கடந்த 4ஆவது வீரர் என்ற பெருமையை காலிஸ் பெற்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai