சுடச்சுட

  
  cri1

  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி வியாழக்கிழமை தொடங்குகிறது.

  பகல்-இரவு ஆட்டமாக நடைபெறும் இப்போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் தொடங்குகிறது. சென்னையில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்தது. அதற்கு தக்க பதிலடி தர இந்திய அணி வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கடந்த போட்டியில் இந்திய அணியின் தோல்விக்குக் காரணம் முன்னணி வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்ததும், அதிக ரன்களைக் குவிக்க முடியாததும்தான். அதுவும் முதல் 5 வீரர்கள் ஆட்டமிழந்த விதம் ரசிகர்களை வருத்தத்தில் ஆழ்த்தியது.

  முதல் போட்டியில் இந்தியா குறைவான ரன்களே எடுத்திருந்தாலும் பாகிஸ்தான் அணி எளிதாக வெற்றி பெற முடியவில்லை. இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி அளித்ததாக பாகிஸ்தான் அணியின் கேப்டனே ஒப்புக் கொண்டார்.

  தொடக்க வீரர்களான சேவாக், கம்பீர் ஜோடி தொடர்ந்து ரன் எடுக்கத் தடுமாறி வருகிறது. கடந்த ஆண்டு சேவாக்குக்கு மோசமாக அமைந்தது. 10 போட்டிகளில் விளையாடி 217 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

  இந்த ஆண்டில் அதிக ரன்கள் குவிக்க அவர் முனைவார் என்று தெரிகிறது. கடந்த போட்டியில் காயமடைந்த கோலி இப்போட்டியில் எப்போதும் போல களமிறங்குவார். ரஹானே இப்போட்டியில் களமிறக்கப்படலாம்.

  மொத்தத்தில் இந்தப் போட்டி இந்திய அணிக்கு மிக முக்கியம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இதில் இந்திய அணி ஒருவேளை தோற்க நேரிட்டால் தொடரை பாகிஸ்தானிடம் இழந்து விடும். அதனால் இப்போட்டியில் வெற்றி பெற்றே ஆக வேண்டிய கட்டாயத்துக்கு இந்திய அணி தள்ளப்பட்டுள்ளது.

  பாகிஸ்தான் அணியைப் பொறுத்த வரை முதல் போட்டியை வென்ற உற்சாகத்துடன் களமிறங்குகிறது. கடந்த போட்டியில் ஆட்டத்தின் முதலிலேயே முன்னணி பேட்ஸ்மேன்கள் வீழ்ந்தாலும், நடுக்கள வீரர்கள் சிறப்பாக விளையாடி அணியை வெற்றி பெற வைத்தனர்.

  அதேபோல் அந்த அணியின் பந்து வீச்சு சிறப்பாகவே இருந்தது. இப்போட்டியில் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் அந்த அணி வீரர்கள் உள்ளனர். இரு அணியிலும் பெரிய மாற்றம் இருக்காது என்றே தெரிகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai