சுடச்சுட

  

  பாகிஸ்தானுக்கு தக்க பதிலடியை இந்தியா தரும்: சச்சின் டெண்டுல்கர்

  Published on : 03rd January 2013 12:30 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  sachin3

  பாகிஸ்தான் அணிக்கு எதிரான 2ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்தியா தக்க பதிலடி தரும் என்று நம்புவதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

  ஒருநாள் கிரிக்கெட் போட்டியிலிருந்து சமீபத்தில் தனது ஓய்வை அறிவித்த பின் முதன்முûறாக செய்தியாளர்களை சந்தித்த சச்சின் இவ்வாறு தெரிவித்தார். அப்போது அவர் மேலும் கூறியது: ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்றாலும் என் மனது முழுவதும் இந்திய அணியுடன்தான் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் பாகிஸ்தான் அணியை வெற்றிகொண்டு இந்தியா தொடரைக் கைப்பற்றும் என்பதில் சந்தேகமில்லை என்று சச்சின் தெரிவித்தார்.

  அவர் ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வு பெற்ற பின் தனது குடும்பத்தினருடன் உத்தரகண்ட் மாநிலத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, 23 ஆண்டு காலமாக எனது குடும்பத்துடன் குறைவாகவே நேரத்தை செலவிட்டேன். இங்கு, நீண்ட தூரம் நடக்கிறேன். நாடு, எத்தனை அழகாக உள்ளது என்பதைக் கண்டு ரசிக்கிறேன் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai