சுடச்சுட

  
  sania

  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்று வரும் டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மட்டேக் ஜோடி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

  பிரிஸ்பேனில் வியாழக்கிழமை நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் சானியா-பெத்தனி ஜோடி, டேனிலா ஹண்ட்சோவா-கத்ரீனா ஸிரிபோட்னிக் ஜோடியை எதிர்கொண்டது.

  ஆட்டத்தின் முதல் செட்டில் 5-1 என்ற புள்ளிக் கணக்கில் சானியோ ஜோடி முன்னிலையில் இருந்தது.

  அப்போது, காயத்தால் அவதிப்பட்டு வந்து ஹண்ட்சோவா ஜோடி தொடர்ந்து விளையாட முடியவில்லை. இதனால், சானியா- பெத்தனி ஜோடி

  இறுதிச்சுற்றுக்குள் எளிதாக நுழைந்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai