சுடச்சுட

  

  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டியைக் கண்டுகளிக்க பாகிஸ்தானின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்தத்துக்கு விசா அளித்தது சரியே என்று மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

  "மியான் தத் ஒரு சிறந்த கிரிக்கெட் வீரர். அவருடைய விசா விண்ணப்பம் பரிசீலினை செய்யப்பட்டதில் முறையாக இருந்தது. அதனால் விசா அளிக்கப்பட்டது' என்று மத்திய உள்துறை இணையமைச்சர் ஆர்.பி.என். சிங் வியாழக்கிழமை தெரிவித்தார்.

  பாகிஸ்தானுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி தில்லியில் வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இப்போட்டியைக் காண அவருக்கு விசா அளிக்கப்பட்டது.

  இதற்கு, பாஜக மற்றும் சிவ சேனைக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். மியான் தத்தின் குடும்பத்துக்கும், நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் குடும்பத்துக்கும் தொடர்பு இருப்பதாக அக்கட்சிகள் சுட்டிக் காட்டியிருந்தன. மியான் தத்தின் மகன், தாவூத்தின் மகளை திருமணம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai