சுடச்சுட

  

  இந்தியப் பணயத்தை ரத்து செய்தார் பாகிஸ்தான் கிரிக்கெட் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான் தத்.

  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையே தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள 3ஆவது ஒருநாள் போட்டியைக் காண மியான் தத்துக்கு மத்திய அரசு விசா அளித்தது. இதற்கு, பாஜக, சிவசேனைக் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

  மியான் தத் குடும்பத்துக்கும், நிழல் உலக தாதாவான தாவூத் இப்ராஹிம் குடும்பத்துக்கும் உள்ள தொடர்பை அக்கட்சிகள் சுட்டிக் காட்டியிருந்தன.

  இதைத் தொடர்ந்து இந்தியப் பயணத்தை வெள்ளிக்கிழமை ரத்து செய்தார் மியான் தத். மேற்கொண்டு விவாதங்கள் ஏற்படுவதைத் தடுக்கவே அவர் இம்முடிவை எடுத்துள்ளதாக பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai