சுடச்சுட

  

  இந்திய ஹாக்கி அணி நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது என்று நெதர்லாந்து ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஓல்டுமேன்ஸ் தெரிவித்தார்.

  இது தொடர்பாக பிடிஐ செய்தியாளரிடம் அவர் மேலும் கூறியதாவது: கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்திய அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது.

  அனைத்து துறைகளிலும் இந்திய ஹாக்கி அணி சிறந்து விளங்குகிறது. ஆஸ்திரேலியா, ஹாலந்து மற்றும் ஜெர்மனி போன்ற பலம் வாயந்த அணிகளுடன் அடிக்கடி இந்தியா விளையாடி வீரர்களின் திறமையை மேலும் வளர்த்த வேண்டும். அப்போதுதான் அணி வீரர்கள் சிறந்த அனுபவத்தைப் பெறுவர். ஆசிய அணிகளுடன், விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ளக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai