சுடச்சுட

  
  spt3

  இலங்கைக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி தனது முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. சிட்னி நகரில் வியாழக்கிழமை தொடங்கிய இப்போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

  இதைத் தொடர்ந்து வெள்ளிக்கிழமை தொடங்கிய 2ஆவது நாள் ஆட்டத்தில் களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 36 ரன்களுக்கு தனது முதல் விக்கெட்டை இழந்தது.

  பின்னர் ஜோடி சேர்ந்த வார்னரும், ஹியூகிஸýம் சிறப்பாக விளையாட அணியின் ஸ்கோர் உயர்ந்தது. 85 ரன்கள் எடுத்திருந்தபோது வார்னர் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 87 ரன்கள் எடுத்திருந்த ஹியூகிஸ் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் கேப்டன் கிளார்க் 50 ரன்கள் எடுத்தார்.

  2ஆம் நாள் ஆட்ட நேர இறுதியில் ஆஸ்திரேலிய அணி 88 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 342 ரன்கள் எடுத்துள்ளது. வேட் 47 ரன்களிலும், சிடில் 16 ரன்களிலும் களத்தில் உள்ளனர். 3ஆம் நாள் ஆட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.

  கடைசிப் போட்டி

  ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் ஹசி, இப்போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஏற்கெனவே அறிவித்திருந்தார்.

  அதனால் அவர் களமிறங்கையில், இலங்கை அணி வீரர்களும் ரசிகர்களும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

  இந்த ஆட்டத்தில் மெதுவாக ரன் சேர்த்து வந்த அவர் 25 ரன்கள் எடுத்திருந்தபோது ரன் அவுட்டானார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai