சுடச்சுட

    

    சீனியர் கூடைப்பந்து: உத்தரகண்ட், ரயில்வே அணிகள் சாம்பியன்

    By dn  |   Published on : 05th January 2013 01:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தேசிய சீனியர் கூடைப் பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் பிரிவில் நடப்புச் சாம்பியன் பஞ்சாபை வீழ்த்தி உத்தரகண்ட் அணி சாம்பியன் பட்டம் வென்றது.

    மகளிர் பிரிவில் தமிழக அணியை வீழ்த்தி ரயில்வே அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. பஞ்சாப் மாநிலம், லூதியானாவில் 63ஆவது தேசிய சீனியர் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. ஆடவர் மற்றும் மகளிர் என இரு பிரிவுகளில் போட்டிகள் நடைபெற்றன.

    வெள்ளிக்கிழமை நடந்த இறுதிப் போட்டியில் உத்தரகண்ட் அணியும், பஞ்சாப் அணியும் மோதின. இதில் உத்தரகண்ட் அணி 79-61 என்ற புள்ளிக் கணக்கில் பஞ்சாபை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.

    ரயில்வே சாம்பியன்: மகளிர் பிரிவில் ரயில்வே அணியுடன் மோதியது தமிழக அணி. பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் ரயில்வே அணி 102-82 என்ற புள்ளிக்கணக்கில் பட்டம் வென்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai