சுடச்சுட

  

  சென்னை ஓபன் காலிறுதி: சிலிச், வாவ்ரிங்கா அதிர்ச்சி தோல்வி

  By - ஏ.வி.பெருமாள் -  |   Published on : 05th January 2013 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் காலிறுதியில் முன்னணி வீரர்களான குரோஷியாவின் மரின் சிலிச், ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா, செக். குடியரசின் பெர்டிச் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினர்.

  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி.டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 5-வது நாளான வெள்ளிக்கிழமை காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன.

  ஒற்றையர் பிரிவு முதல் காலிறுதி ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச்சும், பிரான்ஸின் பெனாய்ட் பேரும் மோதினர். தரவரிசையில் 15-வது இடத்தில் உள்ளவரான மரின் சிலிச், தரவரிசையில் 47-வது இடத்தில் உள்ளவரான பெனாய்ட் பேரை எளிதாக வீழ்த்திவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல் செட்டின் 3-வது கேமிலேயே மரின் சிலிச்சின் சர்வீûஸ முறியடித்து 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார் பெனாய்ட்.

  இதன்பிறகு 6-வது கேமில் பெனாய்ட்டின் சர்வீûஸ முறியடித்த மரின் சிலிச், அடுத்த கேமிலேயே தனது சர்வீûஸ இழந்தார். பின்னர் மரின் சிலிச் அபாரமாக ஆடினாலும், முதல் செட்டை பிடிக்க முடியவில்லை. 10-வது கேமில் பெனாய்ட்டின் சர்வீûஸத் தகர்க்க மரின் சிலிச் கடுமையாகப் போராடினார். எனினும் சரிவிலிருந்து மீண்ட பெனாய்ட் தனது சர்வீûஸ மீட்டதோடு, முதல் செட்டையும் முடிவுக்குக் கொண்டு வந்தார். 34 நிமிடங்கள் நீடித்த இந்த செட் 6-4 என்ற கணக்கில் பெனாய்ட் வசமானது.

  2-வது செட்டின் 3-வது கேமில் இருந்து ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. இந்த கேமில் சிலிச்சுக்கு சவால் அளிக்கும் வகையில் விளையாடினார் பெனாய்ட். இதனால் சற்று பதற்றமடைந்த சிலிச், கடும் போராட்டத்துக்குப் பிறகு தனது சர்வீûஸ தன்வசமாக்கினார். எனினும் அடுத்த கேமில் அதிரடியாக விளையாடிய சிலிச், பெனாய்ட்டின் சர்வீûஸ முறியடித்தார். சர்வீûஸ இழந்ததால் கடும் கோபமடைந்த பெனாய்ட், மிகுந்த ஆக்ரோஷமாக விளையாடியதோடு, அவ்வப்போது தனது கோபத்தை வெளிப்படுத்தும் வகையில் சப்தமும் எழுப்பினார்.

  6-வது கேமில் பெனாய்ட் செய்த டபுள் பால்ட் தவறை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட சிலிச், மீண்டும் பெனாய்ட்டின் சர்வீûஸ முறியடித்தார். இதனால் 7-வது கேமிலேயே இந்த செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார் சிலிச். 33 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட்டை சிலிச் 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார்.

  இதன்பிறகு நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டில் முதல் கேமிலேயே தனது சர்வீûஸ சிலிச்சிடம் இழந்தார் பெனாய்ட். இதன்பிறகு மரின் சிலிச் அதிவேகமாக ஆடியபோதும், 4-வது கேமில் தனது சர்வீûஸ இழந்தார். பின்னர் பெனாய்ட்டின் சர்வீûஸ முறியடிக்க சிலிச் பலமுறை முயற்சி செய்தபோதும், பெனாய்ட்டின் கடும் போராட்டத்துக்கு முன் அது எடுபடவில்லை.

  இந்த செட் டைபிரேக்கருக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கடைசி கேமில் சிலிச்சின் சர்வீûஸ முறியடித்து ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டு வந்தார் பெனாய்ட். 46 நிமிடங்கள் நடைபெற்ற 3-வது செட் 7-5 என்ற கணக்கில் பெனாய்ட் வசமானது. இதன்மூலம் பெனாய்ட் 6-4, 1-6, 7-5 என்ற செட் கணக்கில் மரின் சிலிச்சை வீழ்த்தினார். இந்த ஆட்டத்தில் பெனாய்ட் 9 ஏஸ் சர்வீஸ்களை அடித்தபோதிலும், 7 டபுள் பால்ட் தவறுகளை செய்தார்.

  எனினும் நேர்த்தியான ஆட்டத்தால் சிலிச்சை வீழ்த்தினார். சிலிச் 8 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அதேநேரத்தில் ஒரெயோரு டபுள் பால்ட் தவறை மட்டுமே செய்தார். சிலிச் 2009, 2010 ஆகிய ஆண்டுகளில் சென்னை ஓபனில் பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.

  வாவ்ரிங்கா தோல்வி: மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் 2011 சென்னை ஓபன் சாம்பியனும், தரவரிசையில் 17-வது இடத்தில் இருப்பவருமான ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா 2-6, 6-7 (6) என்ற நேர் செட்களில் தரவரிசையில் 86-வது இடத்தில் உள்ளவரான ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். சற்றும் எதிர்பாராத இந்தத் தோல்வியால் கடும் கோபமடைந்த வாவ்ரிங்கா தனது டென்னிஸ் ராக்கெட்டை (பேட்) உடைத்தெறிந்தார்.

  அரையிறுதியில் டிப்சரேவிச்: 3-வது காலிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் 6-2, 6-4 என்ற நேர் செட்களில் ஜப்பானின் கோ ஸþய்டாவை தோற்கடித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் தனது முதல் சர்வீûஸ ஸþய்டாவிடம் இழந்தபோதிலும், 3, 5, 7-வது கேம்களில் அடுத்தடுத்து ஸþய்டாவின் சர்வீûஸ முறியடித்து 8-வது கேமிலேயே முதல் செட்டை முடிவுக்குக் கொண்டு வந்தார்.

  இதனால் இந்த செட் 32 நிமிடங்களில் 6-2 என்ற கணக்கில் டிப்சரேவிச் வசமானது.

  பின்னர் நடைபெற்ற 2-வது கேமில் ஸþய்டா சற்று போராடினாலும், டிப்சரேவிச்சின் வேகத்துக்கு முன்னால் அது எடுபடவில்லை. இதனால் இந்த செட் 10-வது கேமோடு முடிவுக்கு வந்தது.

  இந்த ஆட்டத்தில் அருமையான பேக் ஹேண்ட் ஷாட்களை கையாண்ட டிப்சரேவிச், 9 ஏஸ் சர்வீஸ்களையும் அடித்தார். சனிக்கிழமை நடைபெறும் அரையிறுதியில் ஸ்லோவேனியாவின் அல்ஜாஸ் பெடேனை சந்திக்கிறார் டிப்சரேவிச்.

  4ஆவது காலிறுதிப் போட்டியில் செக். குடியரசின் பெர்டிச்சும், ஸ்பெயினின் பெüடிஸ்டா ஆட்டும் மோதினர். இப்போட்டியில் 5-7, 6-2, 3-6 என்ற செட் கணக்கில் பெüடிஸ்டாவிடம் பெர்டிச் தோல்வியடைந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.

  சோம்தேவ் ஜோடி தோல்வி: இரட்டையர் பிரிவில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சோம்தேவ், உக்ரைனின் ஸ்டாகோவ்ஸ்கி ஜோடி தாய்லாந்தின் சஞ்சய் ரதிவதனா, சன்சாட் ரதிவதனா ஜோடியை எதிர்கொண்டது. இப்போட்டியில் 6-3, 7-5 என்ற செட் கணக்கில் சஞ்சய் ரதிவதனா, சன்சாட் ரதிவதனா ஜோடி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைந்தது.

  சோம்தேவ் ஜோடி தோல்வி யடைந்ததைத் தொடர்ந்து சென்னை ஓபனில் இந்திய வீரர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது.

  இன்றைய ஆட்டங்கள்

  ஒற்றையர் பிரிவு

  அல்ஜாஸ் பெடேன் (ஸ்லோவேனியா) - டிப்சரேவிச் (செர்பியா)

  பெüடிஸ்டா ஆட் (ஸ்பெயின்) - பெனாய்ட் பேர் (பிரான்ஸ்)

  இரட்டையர் பிரிவு

  ஆண்ட்ரி பெஜிமன், மார்டீன் எம்ரிச் (ஜெர்மனி) -

  சஞ்சய் ரதிவதனா-சன்சாட் ரதிவதனா (தாய்லாந்து)

  ரவென் கிளாசென் (தென் ஆப்பிரிக்கா),

  நிகோலஸ் மான்ரூ (அமெரிக்கா) -

  பெனாய்ட் பேர் (பிரான்ஸ்), வாவ்ரிங்கா (ஸ்விட்சர்லாந்து)

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai