சுடச்சுட

  

  நியூஸிலாந்தை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ் வெற்றி

  By dn  |   Published on : 05th January 2013 01:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  நியூஸிலாந்துக்கு எதிரான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணி இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  தென் ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரில் புதன்கிழமை தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ûஸத் தொடங்கியது.

  45 ரன்களில் ஆல் அவுட்: தென் ஆப்பிரிக்க வீரர்களின் நேர்த்தியான பந்து வீச்சினால் நிலை குலைந்தனர் நியூஸிலாந்து வீரர்கள். அணியில் அதிகபட்சமாக வில்லியம்ஸன் மட்டும் 11 ரன்களை எடுத்தார். தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலாண்டர், 7 ரன்களை விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பின்னர் தனது முதல் இன்னிங்ûஸத் தொடங்கிய தென் ஆப்பிரிக்கா சிறப்பாக விளையாடி ரன்களை குவித்தது. அணியின் ஸ்கோர் 8 விக்கெட் இழப்புக்கு 347 ஆக உயர்ந்தபோது டிக்ளேர் செய்தது.

  போராட்டம்: 302 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது இரண்டாவது இன்னிங்ûஸத் தொடங்கியது நியூஸிலாந்து. ரன் ஏதுமின்றி முதல் விக்கெட்டை இழந்தாலும் பின்வரிசை வீரர்கள் பொறுப்புடன் விளையாடினர். எதிரணியின் பந்து வீச்சு ஆக்ரோஷமாக இருந்தபோதும், அருமையாக விளையாடிய பிரெüன்லீ 160 பந்துகளில் சதமடித்தார். 2 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் அவர் இந்த ரன்களை எடுத்தார். தொடர்ந்து விளையாடிய அவர் 106 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் மெக்கல்லம் 51 ரன்களில் ஆட்டமிழந்தார்.

  மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க நியூஸிலாந்து அணியின் இரண்டாவது இன்னிங்ஸ் 102.1 ஓவரில் 275 ரன்களுக்கு முடிவுக்கு வந்தது. இதனால் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 27 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸிலாந்து தோல்வியைத் தழுவியது.

  தென் ஆப்பிரிக்கத் தரப்பில் ஸ்டெயின் 3 விக்கெட்டுகளையும், பிலாண்டர் மற்றும் காலிஸ் தலா 2 விக்கெட்டுகளையும், மோர்கல் மற்றும் பீட்டர்சன் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

  இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து மொத்தம் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு வித்திட்ட பிலாண்டர் ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். 5 நாள் கொண்ட இப்போட்டி 3 நாள்களுக்குள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

  இந்த வெற்றியின் மூலம் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா முன்னிலை பெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai