சுடச்சுட

    

    பிரிட்டன் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் போட்டியின் காலிறுதிச் சுற்றுக்கு 5 இந்தியர்கள் முன்னேறினர்.

    பிரிட்டனின் ஷிஃப்பீல்டு நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஆடவர் பிரிவில் 3 பேரும் மகளிர் பிரிவில் 2 பேரும் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

    ஆடவர் பிரிவில், 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் மகேஷ் மங்கான்கரும், 17 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் குஷ் குமாரும், 15 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் வேலவன் செந்தில் குமாரும் காலிறுதிச்சுற்றுக்குள் நுழைந்தனர்.

    மகளிர் பிரிவின் 19 வயதுக்குட்பட்டோருக்கான போட்டியில் அபராஜிதா பாலமுருகன் மற்றும் லக்ஷியா ராகவேந்திரன் ஆகியோர் காலிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai