சுடச்சுட

  
  spt4

  ஆஸ்திரேலிய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் கிளென் மெக்ரத்துக்கு ஐசிசியின் "ஹால் ஆஃப் ஃபேம்' கெüரவம் அளிக்கப்பட்டது. கிரிக்கெட்டில் பல்வேறு சாதனைகள் புரிந்தவர்களுக்கு இந்த கெüரவம் அளிக்கப்படும்.

  சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், உணவு இடைவேளையின்போது இந்நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னாள் வீரர்களான மேற்கிந்தியத் தீவுகளின் பிரையன் லாரா, இங்கிலாந்தின் எனிட் பேக்வெல் ஆகியோருக்கும் இந்த கெüரவம் கடந்த ஆண்டு அளிக்கப்பட்டது.

  1993ஆம் ஆண்டு முதல் 2007ஆம் ஆண்டு வரை 124 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய விளையாடிய மெக்ரத் 563 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். வேகப் பந்து வீச்சாளர்களில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றியவர் வரிசையில் இவர் முதலிடத்தில் உள்ளார்.

  அதேபோல் 250 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 381 விக்கெட்டுகளையும் கைப்பற்றியுள்ளார்.

  1999 முதல் 2007 ஆண்டு வரை தொடர்ந்து 3 உலகக் கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணியில் மெக்ரத் இடம் பிடித்திருந்து குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai