சுடச்சுட

  

  இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

  ஏற்கெனவே நடைபெற்ற முதல் இரு போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியைத் தழுவி தொடரை பாகிஸ்தானிடம் இழந்தது. இந்நிலையில், 3ஆவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றி பெறுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

  சிறப்பான தொடக்கம் வேண்டும்: இந்திய அணியின் பேட்டிங் தொடர்ந்து சொதப்பி வருவது அணிக்குப் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் தொடக்க ஆட்டக்காரர்களான சேவாக்கும், கம்பீரும் அதிக ரன்களை குவிக்காதது பின்கள வீரர்களுக்கு நெருக்கடி ஏற்படுகிறது.

  அதனால் இப்போட்டியில் தொடக்க வீரர்கள் மாற்றப்பட வாய்ப்புள்ளது. கடந்த இரு போட்டிகளிலும் வாய்ப்பு கொடுக்கப்படாத அஜிங்க்யா ரஹானே தொடக்க வீரராக களமிறக்கப்படலாம். தொடக்க வீரர்கள் அதிக ரன்களை குவிக்கும்போது மற்ற வீரர்களும் ரன் குவித்து அணியை வெற்றி பெற வைப்பர் என்பதில் சந்தேகமில்லை. அதேபோல் கோலி, யுவராஜ், ரெய்னா ஆகிய 3 பேட்ஸ்மேன்களும் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறுவது வருத்தமளிப்பதாக உள்ளது. அணியில் மூத்த வீரர்கள் இல்லாத குறையைப் போக்கும் பொறுப்பு இவர்களுக்கு உள்ளது.

  "இந்திய பேட்ஸ்மேன்கள் நீண்ட நேரம் ஆடுகளத்தில் விளையாட போராடி வருகின்றனர்' என்று பாகிஸ்தான் அணியின் கேப்டன் மிஸ்பா உல்-ஹக் தெரிவித்துள்ளார். அதனால் களத்தில் நீண்ட நேரம் நின்றாலே அணியின் ஸ்கோர் உயரும். அணியில் தோனி மட்டும் கடந்த இரு போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினார். மற்ற வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தாலும் கேப்டன் பொறுப்பை உணர்ந்து அவர் செயல்படுகிறார்.

  பந்து வீச்சிலும் பின்னடைவு: இந்திய அணியின் பந்து வீச்சு சொல்லிக் கொள்ளும்படி எடுபடவில்லை. பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சும் சரி, சுழறபந்து வீச்சும் சரி இந்திய பேட்ஸ்மேன்களை அச்சுறுத்துகிறது.

  ஆல் ரவுண்டர் "பாகிஸ்தான்': பேட்டிங், பந்து வீச்சு என இரு துறைகளிலும் பாகிஸ்தான் அணி சிறந்து விளங்குகிறது. பேட்டிங்கில் அந்த அணியின் தொடக்க வீரர் ஜம்ஷெட் நசீர், ரன் குவிக்கும் இயந்திரமாக உள்ளார். கடந்த 2 போட்டிகளிலும் அவர் சதமடித்துள்ளது அணிக்கு பலத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரைத் தொடர்ந்து முகமது ஹபீஸ், யூனிஸ்கான் மற்றும் மிஸ்பா உல்-ஹக் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர்.

  பந்து வீச்சில் ஜுனைத் கான், முகமது இர்ஃபான் மற்றும் உமர் குல் ஆகியோரின் பந்து வீச்சை இந்தியா சமாளிக்கத் தவறுகையில் இப்போட்டியிலும் இந்திய அணியின் தோல்வி தவிர்க்க முடியாததாகிவிடும்.

  பாகிஸ்தான் வீரர்களுக்கு பரிசு: இந்திய சுற்றுப்பயணத்தில் சிறப்பாக விளையாடும் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai