சுடச்சுட

  
  spt3

  ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெற்ற சர்வதேச டென்னிஸ் போட்டியின் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்சா, அமெரிக்காவின் பெத்தனி மட்டெக் ஜோடி சாம்பியன் பட்டம் வென்றது.

  இந்த சீஸனில் இரட்டையர் பிரிவுப் போட்டியில் சானியா பெற்ற முதல் பட்டம் இதுவாகும். இது அவருக்கு 15ஆவது பட்டமாகும்.

  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் சானியா, மட்டெக் ஜோடியும் ஜெர்மனியின் அன்ன-லீனா குரோன்ஃபீல்டு, செக் குடியரசின் குவெட்டா பெச்செக் ஜோடியும் மோதின. ஆட்டத்தின் ஆரம்பத்தில் இருந்தே சானியா ஜோடி சிறப்பாக விளையாடியது.

  ஆட்டத்தின் முடிவில் 4-6, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று சானியா, மட்டெக் ஜோடி கோப்பையை வென்றது. இப்போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் சானியா, மட்டெக் ஜோடிக்கு ரூ. 2.8 கோடி பரிசுத் தொகை அளிக்கப்பட்டது. இந்த ஜோடி 470 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

  ஒற்றையர் பிரிவு: இப்போட்டியின் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் அமெரிக்காவின் செரீனா வில்லியம்ஸ் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ரஷியாவின் பவ்லியுசென்கோவாவை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றினார். இப்போட்டியின் ஆடவர் பிரிவு இறுதிப் போட்டிக்கு பிரிட்டனின் ஆன்டி முர்ரேவும், பல்கேரியாவின் கிரகோர் திமித்ரோவும் முன்னேறியுள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai