சுடச்சுட

  

  இங்கிலாந்து அணியுடனான முதலாவது பயிற்சி ஆட்டத்தில் இந்திய ஏ அணி 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  இப்போட்டியில் முதலில் விளையாடிய இந்திய ஏ அணி நிர்ணயிக்கப்பட்ட 39 ஓவர்களில் இந்திய ஏ அணி 4 விக்கெட் இழப்புக்கு 224 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட் செய்த இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

  தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய ஏ அணியில் கேப்டன் அபினவ் முகுந்தும், முரளி விஜயும் களமிறங்கினர்.

  இந்த ஜோடி சிறப்பான தொடக்கத்தை ஏற்படுத்தித் தந்தது. அணியின் ஸ்கோர் 118ஆக உயர்ந்தபோது 57 ரன்கள் எடுத்திருந்த முகுந்த் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த முரளி விஜய் 76 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதியில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 224 ரன்கள் எடுத்தது.

  டக்ஸ்வொர்த் லூயிஸ் முறைப்படி இங்கிலாந்து அணிக்கு 229 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து அணி 36 ஓவர்களில் 175 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியடைந்தது.

  இயான் பெல் மட்டும் அதிகபட்சமாக 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இரண்டாவது பயிற்சி ஆட்டத்தில் தில்லி அணியுடன் இங்கிலாந்து அணி வரும் செவ்வாய்க்கிழமை மோதுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai