சுடச்சுட

  

  இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் பங்கேற்கும் இந்திய அணி ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

  எதிர்பார்த்ததுபோலவே சேவாக்குக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அவருக்குப் பதிலாக புஜாரா சேர்க்கப்பட்டுள்ளார். தோனியே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

  தடுமாறி வரும் கம்பீரும், ரோகித் சர்மாவும் அணியில் இடம் பிடித்தனர். இப்போது அறிவிக்கப்பட்டுள்ள அணியினர், இங்கிலாந்து அணியுடன் முதல் 3 ஒருதினப் போட்டிகளில் விளையாடுவர்.

  இங்கிலாந்து அணியுடன் இந்திய அணி 5 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் ஒரு நாள் போட்டி வரும் 11ஆம் தேதி தொடங்குகிறது.

   

  அணி வீரர்கள் விவரம்: தோனி (கேப்டன்), கெüதம் கம்பீர், அஜிங்க்யா ரஹானே, சேத்தேஸ்வர் புஜாரா, விராட் கோலி, ரோஹித் சர்மா, யுவராஜ் சிங், சுரேஷ் ரெய்னா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, புவனேஷ் குமார், அசோக் திண்டா மற்றும் சமி அகமது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai