சுடச்சுட

  
  spt5

  இலங்கை அணிக்கு எதிரான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

  சிட்னி நகரில் நடைபெற்ற இப்போட்டியில் முதல் இன்னிங்ஸில் இலங்கை அணி 294 ரன்களும், ஆஸ்திரேலியா 432 ரன்களும் எடுத்தன. பின்னர் இரண்டாவது இன்னிங்ûஸ விளையாடிய இலங்கை 278 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

  இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு 141 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி 42.5 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது.

  இப்போட்டியில் இரு இன்னிங்ஸிகளிலும் சேர்த்து 7 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜேக்ஸன் பேடு ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். தொடர் நாயகன் விருதை கேப்டன் கிளார்க் தட்டிச் சென்றார்.

  3 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றி இலங்கை அணியை வொயிட் வாஷாக்கியது. ஏற்கெனவே நடந்து முடிந்த முதல் டெஸ்ட் போட்டியில் 137 ரன்கள் வித்தியாசத்திலும், 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 201 ரன்கள் வித்தியாசத்திலும் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai