சுடச்சுட

  

  சென்னை ஓபன்: ஜான்கோ டிப்சரேவிச் சாம்பியன்

  By - ஏ.வி.பெருமாள் -  |   Published on : 07th January 2013 12:36 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.

  1 மணி நேரம் 49 நிமிடங்கள் நடைபெற்ற ஒற்றையர் இறுதிச்சுற்றில் டிப்சரேவிச் 3-6, 6-1, 6-3 என்ற செட் கணக்கில் ஸ்பெயினின் ராபெர்ட்டோ பெüதிஸ்டா அகட்டை தோற்கடித்து முதல் முறையாக சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார்.

  சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்.டி.ஏ.டி. டென்னிஸ் மைதானத்தில் நடைபெற்ற இப் போட்டியின் ஒற்றையர் மற்றும் இரட்டையர் இறுதி ஆட்டங்கள் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றன. முதலில் நடைபெற்ற ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 9-வது இடத்தில் உள்ள ஜான்கோ டிப்சரேவிச்சும், 80-வது இடத்தில் உள்ள ராபெர்ட்டோ பெüதிஸ்டாவும் மோதினர்.

  இந்த ஆட்டத்தின் முதல் செட்டின் 2-வது கேமில் டிப்சரேவிச்சின் சர்வீûஸ முறியடித்த பெüதிஸ்டா முதல் 6 கேம்களின் முடிவில் 4-2 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தார். 7-வது கேமில் பெüதிஸ்டாவின் சர்வீûஸ முறியடிக்க டிப்சரேவிச் போராடினார். எனினும் அது தோல்வியிலேயே முடிந்தது. 9-வது கேமில் சிறப்பாக ஆடிய பெüதிஸ்டா தனது சர்வீûஸ தன்வசமாக்கியதன் மூலம் முதல் செட்டை 35 நிமிடங்களில் முடிவுக்குக் கொண்டு வந்தார். இந்த செட் 6-3 என்ற கணக்கில் பெüதிஸ்டா வசமானது.

  2-வது செட்டில் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய டிப்சரேவிச் 2-வது கேமில் பெüதிஸ்டாவின் சர்வீûஸ முறியடித்தார். இந்த செட்டில் பெüதிஸ்டாவின் ஆட்டம் டிப்சரேவிச்சிடம் எடுபடவில்லை. இதனால் 4-வது கேமிலும் பெüதிஸ்டாவின் சர்வீûஸ முறியடித்த டிப்சரேவிச் முதல் 5 கேம்களின் முடிவில் 5-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். 6-வது கேமில் கடும் போராட்டத்துக்குப் பிறகே தனது சர்வீûஸ மீட்டார் பெüதிஸ்டா. அடுத்த கேமில் அதிரடியாக சர்வீûஸ போட்ட டிப்சரேவிச் 2-வது செட்டை 6-1 என்ற கணக்கில் கைப்பற்றினார். இந்த செட் 37 நிமிடங்கள் நடைபெற்றது.

  பின்னர் நடைபெற்ற வெற்றியைத் தீர்மானிக்கும் 3-வது செட்டின் 3-வது கேமில் பௌதிஸ்டாவின் சர்வீûஸ முறியடித்த டிப்சரேவிச் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றார். இதன்பிறகு தனது சர்வீûஸ தக்கவைக்கவே பெüதிஸ்டா போராட வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் டிப்சரேவிச்சுக்கு சவால் அளிக்க முடியவில்லை. தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய டிப்சரேவிச் 9-வது கேமில் மீண்டும் பெüதிஸ்டாவின் சர்வீûஸ முறியடித்தார். இதன்மூலம் 37 நிமிடங்கள் நடைபெற்ற 3-வது செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார் டிப்சரேவிச்.

  இந்த ஆட்டத்தில் டிப்சரேவிச் 8 ஏஸ் சர்வீஸ்களை அடித்தார். அதேநேரத்தில் ஒரெயொரு டபுள் பால்ட் தவறை மட்டுமே செய்தார். 5 ஏஸ் சர்வீஸ்களை அடித்த பெüதிஸ்டா 3 முறை டபுள் பால்ட் தவறு செய்தார்.

  வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் சாம்பியன்: இரட்டையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா-பிரான்ஸின் பெனாய்ட் பேர் ஜோடி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இந்த ஜோடி இறுதிச்சுற்றில் 6-2, 6-1 என்ற நேர் செட்களில் ஜெர்மனியின் ஆன்ட்ரே பெஜிமான்-மார்ட்டின் எம்ரிச் ஜோடியை வீழ்த்தியது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் 4 மற்றும் 8-வது கேம்களில் ஜெர்மனி ஜோடியின் சர்வீûஸ முறியடித்த வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடி, 6-2 என்ற கணக்கில் அந்த செட்டை கைப்பற்றியது. இந்த செட் 27 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது.

  பின்னர் நடைபெற்ற 2-வது செட்டிலும் வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடியே ஆதிக்கம் செலுத்தியது. இதனால் இந்த செட்டில் 2 மற்றும் 4-வது கேம்களில் ஜெர்மனி ஜோடியின் சர்வீûஸ தகர்த்த வாவ்ரிங்கா-பெனாய்ட் ஜோடி 7-வது கேமிலேயே இந்த செட்டை முடிவுக்கு கொண்டு வந்தது. 28 நிமிடங்கள் நடைபெற்ற இந்த செட் 6-1 என்ற கணக்கில் வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடியின் வசமானது. இந்த ஆட்டத்தில் வாவ்ரிங்கா ஜோடிக்கு ஏஸ் சர்வீஸ்கள் பலமாக அமைந்தன. வாவ்ரிங்கா ஜோடி 5 ஏஸ் சர்வீஸ்களை அடித்தது. அதேநேரத்தில் எதிர்ஜோடி ஒரு ஏஸ் சர்வீஸ் கூட அடிக்கவில்லை. மேலும் அவர்கள் 4 டபுள் பால்ட் தவறுகளை செய்தனர்.

  இரட்டையர் பிரிவில் வாவ்ரிங்கா இரண்டாவது சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளார். முன்னதாக 2008 சீன ஒலிம்பிக்கில் ரோஜர் ஃபெடரருடன் இணைந்து தங்கம் வென்றதே அவர் வென்ற முதல் பட்டம். பெனாய்ட் பேர் இரட்டையர் பிரிவில் வென்ற முதல் சாம்பியன் பட்டம் இது.

  முதல் செர்பியர்

  6-வது முறையாக சென்னை ஓபனில் பங்கேற்ற டிப்சரேவிச் முதல் முறையாக சென்னை ஓபனில் பட்டம் வென்றார். இதன்மூலம் சென்னை ஓபனில் சாம்பியன் பட்டம் வென்ற முதல் செர்பிய வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இது ஏடிபி ஒற்றையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் டிப்சரேவிச் வெல்லும் 4-வது சாம்பியன் பட்டம் ஆகும். இதுமட்டுமின்றி சென்னை ஓபனில் ஒற்றையர், இரட்டையர் என பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற 2-வது வீரர் என்ற பெருமையையும் டிப்சரேவிச் பெற்றுள்ளார். 2012 சென்னை ஓபனில் இந்தியாவின் லியாண்டர் பயஸýடன் இணைந்து இரட்டையர் பிரிவில் பட்டம் வென்றார் டிப்சரேவிச். இரு பிரிவுகளிலும் சாம்பியன் பட்டம் வென்ற முதல் வீரர் பெல்ஜியத்தின் சேவியர் மலிஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

  டிப்சரேவிச்சுக்கு ரூ.38 லட்சம்

  இப் போட்டியின் மொத்தப் பரிசுத் தொகை ரூ.2 கோடியே 35 லட்சம் ஆகும். ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்ற டிப்சரேவிச்சுக்கு ரூ.38 லட்சமும், 250 ஏடிபி புள்ளிகளும் கிடைத்துள்ளன. 2-வது இடம்பிடித்த பெüதிஸ்டாவுக்கு ரூ.20 லட்சமும், 150 ஏடிபி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இரட்டையர் பிரிவில் பட்டம் வென்ற ஸ்டானிஸ்லஸ் வாவ்ரிங்கா-பெனாய்ட் பேர் ஜோடிக்கு ரூ.13 லட்சமும், 250 ஏடிபி புள்ளிகளும், 2-வது இடம்பிடித்த ஆன்ட்ரே பெஜிமான்-மார்ட்டின் எம்ரிச் ஜோடிக்கு ரூ.7 லட்சமும், 150 ஏடிபி புள்ளிகளும் கிடைத்துள்ளன. பரிசளிப்பு விழாவில் தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை செயலர் முகமது நசிமுதீன், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ராஜாராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சென்னை ஓபன் ஒப்பந்தம் 2016 வரை நீட்டிப்பு

  தெற்காசியாவின் ஒரே ஏடிபி டென்னிஸ் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை நடத்துவதற்காக தமிழ்நாடு டென்னிஸ் சங்கம் மற்றும் ஐஎம்ஜி ஆகியவை செய்துகொண்ட ஒப்பந்தம் இந்த ஆண்டுடன் முடிவடைந்தது. இதனால் அடுத்த ஆண்டு சென்னை ஓபன் டென்னிஸ் நடைபெறுமா என்ற கேள்வியெழுந்தது. இந்த நிலையில் ஒற்றையர் இறுதி ஆட்டம் முடிந்ததும், மேலும் 3 ஆண்டுகள் சென்னை ஓபன் போட்டியை நடத்துவதற்கான ஒப்பந்தம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு டென்னிஸ் சங்க தலைவர் எம்.ஏ.அழகப்பன் அறிவித்தார். இதன்மூலம் 2016 வரை சென்னை ஓபன் டென்னிஸ் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai