சுடச்சுட

  
  spt4

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதிச்சுற்றில் பரோடா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி 3 விக்கெட் இழப்புக்கு 272 ரன்கள் எடுத்துள்ளது. மும்பை அணியில் வாசிம் ஜாஃபர், சச்சின் டெண்டுல்கர் சதமடித்தனர்.

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் லீக் சுற்றுகள் முடிந்து காலிறுதிப் போட்டிகள் ஞாயிற்றுக்கிழமை தொடங்கின. லீக் சுற்றில் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் மும்பை, பரோடா, ஜார்க்கண்ட், பஞ்சாப், செüராஷ்டிரம், கர்நாடகம், சர்வீசஸ் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதிப் போட்டிகள் 5 நாள்கள் நடைபெறுகின்றன.

  மும்பையில் நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் மும்பை அணியும், பரோடா அணியும் மோதின. இதில், டாஸ் வென்ற மும்பை அணி பேட்டிங்கைத் தேர்வு செய்தது. தொடக்கத்திலேயே பவார், ஷா விக்கெட்டை இழந்தபோதும் ஜாஃபர், சச்சின் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இருவரும் சிறப்பாக விளையாடி சதமடித்தனர். 108 ரன்கள் எடுத்திருந்தபோது சச்சின் ஆட்டமிழந்தார். 233 பந்துகளைச் சந்தித்த அவர், 1 சிக்ஸர், 10 பவுண்டரிகளுடன் இந்த ரன்களை எடுத்தார்.

  முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் மும்பை அணி 3 விக்கெட்டுகளை இழந்து 272 ரன்களை எடுத்துள்ளது. ஜாஃபர் 137 ரன்களுடனும், குல்கர்னி ரன் ஏதுமின்றியும் களத்தில் உள்ளனர். திங்கள்கிழமை 2ஆவது நாள் ஆட்டம் நடைபெறுகிறது.

  கவாஸ்கரின் சாதனையை நெருங்கிய சச்சின்

  ஒருநாள் போட்டியிலிருந்து ஓய்வை அறிவித்த பின் சச்சின் ஆடிய முதல் ஆட்டமான இப்போட்டியில் சதமடித்து அசத்தினார். இந்த ஆட்டத்தில் சதமடித்ததன் மூலம் முதல்தரப் போட்டியில் அவர் அடித்த சதங்களின் எண்ணிக்கை 80ஆக உயர்ந்தது. இதன்மூலம் கவாஸ்கரின் சாதனையை சச்சின் நெருங்கியுள்ளார். முதல் தரப் போட்டியில் கவாஸ்கர் 81 சதங்களை விளாசியுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai