சுடச்சுட

  

  ஒருநாள் போட்டி தரவரிசை: தோனி 4-வது இடத்துக்கு முன்னேற்றம்

  By dn  |   Published on : 08th January 2013 12:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  DHONI

  ஒருநாள் கிரிக்கெட் போட்டித் தரவரிசையில் இந்திய கேப்டன் மகேந்திர சிங் தோனி 4-வது இடத்துக்கு முன்னேறினார்.

  சமீபத்தில் நடந்து முடிந்த பாகிஸ்தான் ஒருநாள் கிரிக்கெட் தொடரில் இந்திய அணித் தரப்பில் தோனி மட்டுமே சிறப்பாக விளையாடினார். 3 போட்டிகளில் அவர் 203 ரன்களை எடுத்தார். இதில் ஒரு சதத்தை தோனி விளாசியுள்ளார். இதனால் அவர் இரு இடங்கள் முன்னேறி 4-வது இடத்தைப் பிடித்தார்.

  சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் திங்கள்கிழமை வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மற்ற வீரர்கள்: தரவரிசைப் பட்டியலில் மற்ற இந்திய வீரர்களான சுரேஷ் ரெய்னா ஓர் இடம் முன்னேறி 26ஆவது இடத்தைப் பிடித்தார். யுவராஜ் சிங் 41 ஆவது இடத்தைப்பிடித்தார். தொடர்ந்து தடுமாறி வரும் விராட் கோலிக்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. 824 புள்ளிகளுடன் அவர் 3ஆவது இடத்துக்குத் தள்ளப்பட்டார்.

  ஜம்ஷெட் முன்னேற்றம்: பாகிஸ்தானின் தொடக்க வீரர் நசீர் ஜம்ஷெட் 14 இடங்கள் முன்னேறி 31ஆவது இடத்தைப் பிடித்தார். இது அவருடைய அதிக பட்ச தரவரிசை இடமாகும்.

  தென் ஆப்பிரிக்க வீரர்கள் ஆதிக்கம்: தரவரிசைப் பட்டியலில் முதல் இரு இடங்களையும் தென் ஆப்பிரிக்க வீரர்கள் பகிர்ந்து கொண்டனர். முதல் இடத்தில் ஆம்லாவும், இரண்டாவது இடத்தில் டிவில்லியர்ஸýம் உள்ளனர்.

  பந்து வீச்சு: பந்து வீச்சுத் தரவரிசைப் பட்டியலில் முதல் 20 இடங்களுக்குள் அஸ்வின் மட்டுமே உள்ளார். அவர் 7ஆம் இடத்தில் உள்ளார். இஷாந்த் சர்மா, 24 இடங்கள் பின் தங்கி 72ஆவது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தான் பந்து வீச்சாளர்களான சையீது அஜ்மல் மற்றும் முகமது ஹபீஸ் ஆகியோர் முறையே முதல் இரு இடங்களைப் பிடித்தனர்.

  ஆல் ரவுண்டர்: ஆல் ரவுண்டர் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இரு இடங்கள் முன்னேறி 7ஆவது இடத்தைப் பிடித்தார். பாகிஸ்தானின் முகமது ஹபீஸ் முதலிடத்துக்கு முன்னேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai