சுடச்சுட

    

    கல்லூரிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி: 24-ல் தொடக்கம்

    By dn  |   Published on : 08th January 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கல்லூரி அணிகளுக்கு இடையிலான வாலிபால் போட்டி சென்னையில் இம்மாதம் 24ஆம் தேதி தொடங்குகிறது. 4 நாள்கள் நடைபெறும் இப்போட்டி 27ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.

    இப்போட்டி, சென்னை, எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. ஜான் நினைவு விளையாட்டு அறக்கட்டளை சார்பில் முதல்முறையாக இப்போட்டி நடத்தப்படுகிறது. ஆடவர், மகளிர் என இரு பிரிவுகளிலும் நடைபெறும் இப்போட்டியில் அனைத்து கல்லூரிகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

    போட்டியில் பங்கேற்பது குறித்து வருகிற 20ஆம் தேதிக்குள் உறுதி செய்து கொள்ள வேண்டும் என்று ஜான் விளையாட்டு அறக்கட்டளை துணைத் தலைவர் ஏ.டி.மோகன்ராஜ் தெரிவித்தார். இதற்கான ஏற்பாடுகளை போட்டி ஒருங்கிணைப்புத் தலைவர் ஆர்.எஸ். முனிரத்தினம், தலைவர் எஸ்.சுதாகர் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai