சுடச்சுட

  

  கிரிக்கெட் தொடரைப் போல் ஹாக்கி தொடரும் வெற்றி பெறும்: பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளனம்

  By dn  |   Published on : 08th January 2013 12:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியா, பாகிஸ்தான் கிரிக்கெட் தொடரைப் போல், இரு நாடுகள் விளையாடவுள்ள ஹாக்கிப் போட்டியும் வெற்றி பெறும் என்று அந்நாட்டு ஹாக்கி சம்மேளனம் தெரிவித்துள்ளது.

  இரு நாடுகளுக்கிடையேயான இருபது ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சமீபத்தில் நடந்து முடிந்தது. இதைத் தொடர்ந்து இரு நாட்டு ஹாக்கி அணிகளுக்கிடையேயான போட்டி வரும் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளது.

  இப்போட்டி இந்தியாவில் நடைபெறுகிறது. 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இத்தொடரில் பங்கேற்க பாகிஸ்தான் அணியினர் வரும் மார்ச் மாதம் இங்கு வரவுள்ளனர். இதைத் தொடர்ந்து நல்லெண்ண அடிப்படையில் இந்திய அணியும் பாகிஸ்தான் சென்று விளையாட உள்ளது. இந்த சுற்றுப்பயணம் மே மாதம் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  "கிரிக்கெட் தொடர் வெற்றிகரமாக நடந்த முடிந்தது. இதைத் தொடர்ந்து ஆசியாவின் பலம் வாய்ந்த இரு ஹாக்கி அணிகள் மோதவுள்ள ஹாக்கி தொடரை எதிர்நோக்கி ரசிகர்கள் காத்துள்ளனர்' என்று பாகிஸ்தான் ஹாக்கி சம்மேளன பொதுச் செயலர் ஆசிஃப் பாஜ்வா தெரிவித்தார்.

  "போட்டி விவரங்கள் குறித்து மக்கள் இப்போதே கேட்கத் தொடங்கிவிட்டனர்.

  இந்தியாவில் நடைபெறும் ஆட்டத்தைக் காண விசாவுக்கு விண்ணப்பம் செய்யவும் ரசிகர்கள் தயாராகி விட்டனர்' என்று முன்னாள் வீரர் ஒருவர் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai