சுடச்சுட

  
  spt1

  சர்வதேச டென்னிஸ் தரவரிசைப் பட்டியலில் ஆடவர் பிரிவில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், மகளிர் பிரிவில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்காவும் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளனர்.

  ஆடவர் தரவரிசையில் ஜோகோவிச் 12, 920 புள்ளிகளுடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளார். அவரை விட 2,695 புள்ளிகள் பின் தங்கியுள்ள ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் 2-ம் இடத்தில் உள்ளார்.

  பிரிட்டனின் ஆண்டி முர்ரே 8 ஆயிரம் புள்ளிகளுடன் 3ஆம் இடத்தில் உள்ளார். நான்காவது இடத்துக்கு போட்டி நிலவுகிறது. இப்போது ஸ்பெயினின் ரஃபேல் நடால் 6,600 புள்ளிகளுடன் 4ஆம் இடத்தில் உள்ளார். ஆனால் அவரை விட வெறும் 95 புள்ளிகளே பின் தங்கியுள்ளார் சக நாட்டு வீரரான டேவிட் ஃபெரர். சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியில் காலிறுதியில் தோல்வியைத் தழுவிய செக் குடியரசின் தாமஸ் பெர்டிச் 6ஆம் இடத்தில் உள்ளார்.

  சென்னை ஓபனில் பட்டம் வென்ற செர்பியாவின் ஜான்கோ டிப்சரேவிச் 9ஆவது இடத்தில் உள்ளார்.

  மகளிர் பிரிவு: மகளிர் பிரிவில் அசரென்கா 10,595 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளார். அசரென்காவை விட 450 புள்ளிகள் பின்தங்கியுள்ள ரஷியாவின் மரியா ஷரபோவா இரண்டாம் இடத்திலும், 845 புள்ளிகள் பின்தங்கியுள்ள அமெரிக்காவின் செரீனா வில்லியமஸ் மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai