சுடச்சுட

  

  தேசிய ஹாக்கி அணியில் மீண்டும் இடம் பிடிப்பேன்: சந்தீப் சிங்

  By dn  |   Published on : 08th January 2013 12:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  Sandeep-Singh

  தேசிய ஹாக்கி அணியில் மீண்டும் இடம் பிடிப்பதே எனது இலக்கு என்று ஹாக்கி வீரர் சந்தீப் சிங் தெரிவித்துள்ளார்.

  ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல ஹாக்கி லீக் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம் பிடிப்பேன் என்று சந்தீப் சிங் தெரிவித்துள்ளார். "தேசிய ஹாக்கி அணியிலிருந்து நான் நீக்கப்பட்டது அதிக வலியை ஏற்படுத்தியது. இந்திய ஹாக்கி லீக் போட்டிகளில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் தேசிய அணியில் இடம் பிடிப்பேன். எனது முழு உழைப்பையும் ஹாக்கி லீக் போட்டிகளில் அர்ப்பணித்து தேசிய அணித் தேர்வாளர்களின் கவனத்தை ஈர்ப்பேன்' என்று தெரிவித்தார்.

  ஹாக்கி லீக் போட்டிகள் மூலம் இந்திய அணிக்கு சிறந்த வீரர்கள் கிடைக்கப் பெறுவதுடன், பொருளாதார ரீதியாக வீரர்கள் சிறந்த பலனைப் பெறுவர். அதனால் இளம் வீரர்கள் ஹாக்கி போட்டியை நோக்கி ஈர்க்கப்படுவர்.

  சர்வதேச வீரர்களுடன் விளையாடும் சிறந்த அனுபவத்தை இளம் வீரர்கள் பெறுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

  பெனால்டி கார்னரில் தேர்ச்சி பெற்ற சந்தீப் சிங், ஒலிம்பிக் போட்டியில் பெற்ற தோல்வியைத் தொடர்ந்து அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

  ஹாக்கி லீக் போட்டியில் பங்கேற்கும் மும்பை அணிக்காக தேர்வு செய்யப்பட்ட இவர், ரூ.15.13 லட்சத்துக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார். குறைவான தொகைக்கு, தான் ஏலம் எடுக்கப்பட்டதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்துள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai