சுடச்சுட

  
  WARNE

  இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின்போது மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த சாமுவேல்ஸை அவதூறாகப் பேசிய குற்றத்துக்காக சுழற்பந்து வீச்சாளர் வார்னேவுக்கு ஒரு போட்டியில் விளையாட தடை விதிக்கப்பட்டது.அவருக்கு ரூ. 2.7 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது.

  ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் பிக் பாஷ் லீக் இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

  இதில் மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணியும், ரினிகேட்ஸ் அணியும் மோதின. மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணிக்காக வார்னேவும், ரினிகேட்ஸ் அணிக்காக சாமுவேல்ஸூம் விளையாடினர்.

  சாமுவேல்ஸ் பேட் செய்து கொண்டிருந்தபோது, பந்து வீசிய வார்னே அவதூறான வார்த்தைகளைப் பேசியுள்ளார். இதன் தொடர்ச்சியாக வார்னே பீல்டிங் செய்யும்போது, சாமுவேல்ஸ் மீது பந்தை வீசி காயப்படுத்தியுள்ளார்.

  இதற்கு எதிர்ப்பாக சாமுவேல்ஸ் பேட்டை வீசியுள்ளார். உடனே, இருவரையும் நடுவர்கள் சமாதானப்படுத்தினர்.

  இதைத் தொடர்ந்து இருவர் மீதும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் குற்றம் சாட்டியது. ஆனால், வார்னே, 4 குற்றங்கள் புரிந்ததாகவும் தெரிவித்தது. இதைத் தொடர்ந்து அவருக்கு ஒரு ஆட்டத்தில் விளையாடத் தடையும், ரூ.2.7 லட்சம் அபராதமும் விதித்து நடவடிக்கை எடுத்தது.

  இப்போட்டியில் வார்னே அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai