சுடச்சுட

  

  இந்தியாவுக்காக விளையாட மறுத்தால் அரசின் நிதியுதவி கிடையாது

  By dn  |   Published on : 09th January 2013 12:35 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இந்தியாவுக்காக விளையாட மறுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கு அரசிடம் இருந்து நிதியுதவியை பெற்றுத் தரமாட்டோம் என்று அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) எச்சரிக்கை விடுத்துள்ளது.

  இந்திய டென்னிஸ் அணியின் விளையாடாத கேப்டனான 70 வயது எஸ்.பி.மிஸ்ராவை அந்த பதவியில் இருந்து நீக்க வேண்டும், பயிற்சியாளரை மாற்ற வேண்டும், பரிசுத் தொகையில் தற்போது வழங்கப்பட்டு வரும் 50 சதவீதத்துக்குப் பதிலாக கூடுதலாக வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அடுத்த மாதம் நடைபெறவுள்ள தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் பங்கேற்கமாட்டோம் என்று சோம்தேவ் உள்ளிட்ட இந்திய வீரர்கள் தெரிவித்திருந்தனர்.

  அதற்கு மகேஷ் பூபதி, ரோஹன் போபண்ணா உள்ளிட்டோரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதையடுத்து அவர்களின் சில கோரிக்கைகளை ஏஐடிஏ ஏற்றது. எனினும் அனைத்து கோரிக்கைகளையும் ஏற்காத பட்சத்தில் தங்களின் நிலைப்பாட்டை மாற்றப்போவதில்லை என்று வீரர்கள் தெரிவித்துவிட்டனர்.

  இதையடுத்து அரசிடம் இருந்து நிதியுதவியைப் பெற்றுத் தரமாட்டோம் என்று கூறியுள்ள டென்னிஸ் சங்கம், "வீரர்களுக்காக புதிய மேம்பாட்டுத் திட்டத்தைக் கொண்டு வந்துள்ளோம். அதன்படி தரவரிசை அடிப்படையில் ரூ. 7 லட்சம் முதல் ரூ. 15 லட்சம் வரை அரசிடம் இருந்து வீரர்களுக்கு நிதியுதவி கிடைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்காக விளையாடும் வீரர்களுக்கு தொடர்ந்து ஆதரவு அளிக்கப்படும். சில வீரர்கள் சர்ச்சையை ஏற்படுத்தி வருவதால் இளம் வீரர்களின் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai