சுடச்சுட

  

  கொரிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் இன்று தொடக்கம்: சாய்னா களமிறங்குகிறார்

  By dn  |   Published on : 09th January 2013 12:37 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  கொரிய சூப்பர் சீரிஸ் பிரீமியர் பாட்மிண்டன் போட்டி தென் கொரிய தலைநகர் சியோலில் புதன்கிழமை தொடங்குகிறது.

  இதில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். ஒலிம்பிக் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவுக்கு முதல் பதக்கம் (வெண்கலம்) வென்று தந்தவரான சாய்னா, தனது முதல் சுற்றில் தாய்லாந்தின் சப்ஸ்ரீயை சந்திக்கிறார். தரவரிசையில் 3-வது இடத்தில் இருப்பவரான சாய்னா நெவால், முதல் சுற்றில் எளிதாக வெற்றி கண்டு காலிறுதிக்கு முன்னேறிவிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  சாய்னா காலிறுதிக்கு முன்னேறும்பட்சத்தில் தாய்லாந்தின் மற்றொரு வீராங்கனையான ரட்சனோக் இந்தனனை சந்திப்பார். சாய்னா காலிறுதியில் வெற்றி பெற்றால், அரையிறுதியில் ஒலிம்பிக் சாம்பியனும், தரவரிசையில் முதலிடத்தில் இருப்பவருமான சீனாவின் லீ ஸியூரூயை சந்திக்க வாய்ப்புள்ளது. எனவே அரையிறுதி ஆட்டம் சாய்னாவுக்கு கடும் சவால் நிறைந்ததாக இருக்கும்.

  இதேபோல் ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்கும் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள இந்தியாவின் காஷ்யப், தனது முதல் சுற்றில் இங்கிலாந்தின் ராஜீவ் யூசெப்பை சந்திக்கிறார். 2010 காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியின் அரையிறுதியில் ராஜீவிடம் தோல்வி கண்ட காஷ்யப், 2011-ல் நடைபெற்ற சீன மாஸ்டர்ஸ் போட்டியில் ராஜீவை தோற்கடித்தார். அதன்பிறகு இவர்கள் இருவரும் மீண்டும் இப்போதுதான் மோதவுள்ளனர். சமீபத்தில் சயீத் மோடி கிராண்ட்ப்ரீ போட்டியில் பட்டம் வென்ற காஷ்யப், தற்போது நல்ல பார்மில் உள்ளதால், இப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் ராஜீவ் தான் விளையாடிய கடைசி 6 போட்டிகளில் 5-ல் முதல் சுற்றிலேயே தோல்வி கண்டு வெளியேறியுள்ளார். இதனால் தரவரிசையில் முதல் 30 இடங்களை இழந்த அவர், தற்போது பார்முக்கு திரும்புவதற்காக போராடி வருகிறார்.

  மற்றொரு இந்திய வீராங்கனை பி.வி.சிந்து தனது முதல் சுற்றில் இந்தோனேசியாவின் லிண்டாவெனி ஃபனேட்ரியை சந்திக்கிறார். சிந்து முதல் சுற்றில் வெற்றிபெறும் பட்சத்தில் காலிறுதியில் சீனாவின் லீ ஸியூரூயை சந்திக்க நேரிடும். முன்னதாக கடந்த செப்டம்பரில் நடைபெற்ற சீன மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டியில் சிந்து, லீ ஸியூரூயை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai