சுடச்சுட

  

  தொடர்ந்து 4-வது முறையாக ஃபிஃபாவின் சிறந்த வீரராக மெஸ்ஸி தேர்வு

  By dn  |   Published on : 09th January 2013 12:34 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt4

  கடந்த ஆண்டின் சிறந்த கால்பந்து வீரருக்கான ஃபிஃபா விருதை தொடர்ந்து 4-வது முறையாக பெற்றுள்ளார் ஆர்ஜென்டீன கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி. இதன்மூலம் அதிக முறை இந்த விருதை வென்றதோடு, தொடர்ந்து வென்றவர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

  பார்சிலோனா கிளப் அணிக்காக விளையாடி வரும் மெஸ்ஸி, ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, பார்சிலோ அணியின் மற்றொரு வீரரான ஆண்ட்ரேஸ் இனியெஸ்டா ஆகியோரை பின்னுக்குத் தள்ளி இந்த ஆண்டுக்கான சிறந்த வீரர் விருதை தட்டிச் சென்றுள்ளார்.

  சிறந்த வீரரைத் தேர்வு செய்வதற்காக நடைபெற்ற வாக்கெடுப்பில் மெஸ்ஸிக்கு 41.60 சதவீதம் பேரும், ரொனால்டோவுக்கு 23.68 சதவீதம் பேரும், இனியெஸ்டாவுக்கு 10.91 சதவீதம் பேரும் ஆதரவு தெரிவித்திருந்தனர். 2012-ம் ஆண்டின் சிறந்த பயிற்சியாளராக ஸ்பெயின் கால்பந்து அணியின் பயிற்சியாளர் விசென்டே டெல் பாஸ்கே தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

  தொடர்ந்து 4-வது முறையாக சிறந்த வீரர் விருதை வென்றுள்ள மெஸ்ஸி, இந்த சீசனில் ஸ்பெயின் கால்பந்து கிளப் அணிகளுக்கு இடையிலான போட்டியான "லா லிகா' போட்டியில் அதிக கோல் அடித்தவர்கள் வரிசையில் முதலிடத்தில் (25 கோல்கள்) உள்ளார். கடந்த ஆண்டில் அனைத்துவிதமான போட்டிகளிலும் சேர்த்து 91 கோல்கள் அடித்தோடு, ஓர் ஆண்டில் அதிக கோலடித்தவரான ஜெர்டு முல்லரின் 40 ஆண்டுகால சாதனையையும் மெஸ்ஸி முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai