சுடச்சுட

  
  spt3

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் உத்தரப் பிரதேச அணியை வீழ்த்தி அரையிறுதியை உறுதி செய்தது சர்வீசஸ் அணி.

  மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய இப் போட்டியில் முதலில் பேட் செய்த உத்தரப் பிரதேசம் தனது முதல் இன்னிங்ஸில் 38.4 ஓவர்களில் 134 ரன்களுக்கு சுருண்டது.

  இதையடுத்து பேட் செய்த சர்வீசஸ் அணி தனது முதல் இன்னிங்ஸில் 2-வது நாளான திங்கள்கிழமை 68 ஓவர்களில் 263 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது.

  பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய உத்தரப் பிரதேச அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் 55 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தது.

  3-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 78 ஓவர்களில் 241 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. உத்தரப் பிரதேசம் தரப்பில் ஸ்ரீவஸ்தவா 54, ஆலம் 50 ரன்கள் எடுத்தனர். இம்தியாஸ் அஹமது ஆட்டமிழக்காமல் 40 ரன்கள் எடுத்தார்.

  இதையடுத்து 113 ரன்கள் என்ற எளிதான இலக்குடன் களமிறங்கிய சர்வீசஸ் அணியின் முன்னணி வீரர்களான வர்மா (20), சின்ஹா (0), ஸ்வைன் (10), யஷ்பால் சிங் (0), குப்தா (17) ஆகியோர் அடுத்தடுத்து உத்தரப் பிரதேசத்தின் ராஜ்பூட் பந்துவீச்சில் வெளியேறினர். இதனால் 5 விக்கெட் இழப்புக்கு 54 ரன்கள் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது சர்வீசஸ்.

  இதனால் ஆட்டத்தில் விறுவிறுப்பு ஏற்பட்டது. எனினும் பின்னர் வந்த ராஜத் பாலிவால், கேப்டன் சாட்டர்ஜி ஆகியோரை உத்தரப் பிரதேச பெüலர்களால் வீழ்த்த முடியவில்லை. சிறப்பாக ஆடிய இருவரும் அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். உத்தரப் பிரதேச அணியின் முர்டஸா பந்துவீச்சில் சாட்டர்ஜி சிக்ஸர் அடிக்க சர்வீசஸ் அணி 27.3 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. பாலிவால் 32, சாட்டர்ஜி 34 ரன்கள் எடுத்து களத்தில் இருந்தனர். பாலிவால் முதல் இன்னிங்ஸில் 112 ரன்கள் குவித்தார். கேப்டன் சாட்டர்ஜி காயமடைந்த நிலையிலும்கூட, 2-வது இன்னிங்ஸில் சிறப்பாக ஆடி அணிக்கு வெற்றித் தேடித்தந்தார்.

  உத்தரப் பிரதேசம் தரப்பில் ராஜ்பூட் 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். வேறு யாரும் விக்கெட் எடுக்கவில்லை. 5 நாள்கள் கொண்ட காலிறுதி ஆட்டத்தை இவ்விரு அணிகளும் 3 நாள்களுக்கு உள்ளாகவே முடித்துவிட்டன.

  வலுவான நிலையில் மும்பை: பரோடாவுக்கு எதிரான எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி 645 ரன்கள் குவித்து வலுவான நிலையை எட்டியுள்ளது.

  மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை அணி 2-வது நாள் ஆட்டநேர முடிவில் தனது முதல் இன்னிங்ஸில் 180 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 524 ரன்கள் குவித்திருந்தது.

  3-வது நாளான செவ்வாய்க்கிழமை தொடர்ந்து ஆடிய அந்த அணி 204 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 645 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. அப்போது கேப்டன் அஜித் அகர்கர் 52 ரன்களுடனும், டபோல்கர் ரன் ஏதுமின்றியும் களத்தில் இருந்தனர். முன்னதாக வாசிம் ஜாபர் 150, சச்சின் 108, நாயர் 132 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

  பரோடா தரப்பில் வஹோரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த இன்னிங்ஸில் 645 ரன்கள் குவித்ததன் மூலம் ரஞ்சிப் போட்டியில் தங்களின் முந்தைய அதிகபட்ச ஸ்கோரை சமன் செய்துள்ளது மும்பை அணி. முன்னதாக 1945-46-ல் நடைபெற்ற பரோடாவுக்கு எதிரான ரஞ்சிப் போட்டியில் மும்பை அணி 645 ரன்கள் குவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

   

  பரோடா தடுமாற்றம்: பின்னர் ஆடிய பரோடா அணி 3-வது நாள் ஆட்டநேர முடிவில் 64 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 167 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர்கள் வாஹ்மோட் 53, வகாஸ்கர் 51 ரன்கள் எடுத்தனர்.

  அந்த அணி மும்பையின் ஸ்கோரை எட்ட இன்னும் 478 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. பாலோ ஆனைத் தவிர்க்க 279 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது. முதல் 5 பேட்ஸ்மேன்களை இழந்துவிட்டதால், பரோடா அணி பாலோ ஆனைத் தவிர்ப்பது அவ்வளவு எளிதல்ல.

  ஜார்க்கண்ட் 401: பஞ்சாபுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜார்க்கண்ட் அணி 401 ரன்கள் குவித்துள்ளது.

  ஜாம்ஷெட்பூரில் நடைபெற்று வரும் இப் போட்டியில் முதலில் பேட் செய்த ஜார்க்கண்ட் 3-வது நாளான செவ்வாய்க்கிழமை 149 ஓவர்களில் 401 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

  அந்த அணியில் அதிகபட்சமாக நீமத் 100, ஜேக்கி 132 ரன்கள் குவித்தனர். பஞ்சாப் தரப்பில் எஸ்.கெüல், எஸ்.லேடா ஆகியோர் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

  இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய பஞ்சாப் செவ்வாய்க்கிழமை ஆட்டநேர முடிவில் 58 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 150 ரன்கள் எடுத்துள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜிவான்ஜோத் சிங் 77, டி.கோலி 26 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.

  முன்னதாக இந்தர் சிங் 37 ரன்களில் ஆட்டமிழந்தார். 4-வது நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது. ஜார்க்கண்டின் ஸ்கோரை எட்ட பஞ்சாப் இன்னும் 251 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.

   

  செüராஷ்டிரம் முன்னிலை: கர்நாடகத்துக்கு எதிரான மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் செüராஷ்டிரம் அணி முதல் இன்னிங்ஸில் 73 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

  இந்த ஆட்டம் டிராவில் முடியும் பட்சத்தில் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் செüராஷ்டிரம் அணி எளிதாக அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

  ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த செüராஷ்டிரா அணி 165.3 ஓவர்களில் 469 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது.

  இதையடுத்து பேட் செய்த கர்நாடகம் 3-வது நாளான செவ்வாய்க்கிழமை 102.2 ஓவர்களில் 396 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக மணீஷ் பாண்டே 177, ராபின் உத்தப்பா 60, ராகுல் 55 ரன்கள் எடுத்தனர்.

  செüராஷ்டிரம் தரப்பில் ஜோஷி, ஜடேஜா, மக்வானா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 4-வது நாள் ஆட்டம் புதன்கிழமை நடைபெறுகிறது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai