சுடச்சுட

    

    அரையிறுதியை உறுதி செய்த மும்பை, பஞ்சாப், செளராஷ்டிரம்

    By dn  |   Published on : 10th January 2013 12:13 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் மும்பை, பஞ்சாப், செளராஷ்டிரம் அணிகள் முதல் இன்னிங்ஸில் முன்னிலைப் பெற்றதன் மூலம் அரையிறுதியை உறுதி செய்துள்ளன.

    மும்பையில் நடைபெற்று வரும் பரோடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை அணி தனது முதல் இன்னிங்ஸில் 204 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 645 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்ûஸ ஆடிய பரோடா, 4-வது நாளான புதன்கிழமை 271 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

    பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய மும்பை ஆட்டநேர முடிவில் 51 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இன்னும் ஒருநாள் மட்டுமே உள்ளதால் ஆட்டம் டிராவில் முடிவது உறுதியாகிவிட்டது. இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் மும்பை வெற்றி பெற்று அரையிறுதிக்குள் நுழைவது உறுதியாகிவிட்டது.

    செளராஷ்டிரம் ரன் குவிப்பு: ராஜ்கோட்டில் நடைபெற்று வரும் கர்நாடகத்துக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரம் தனது முதல் இன்னிங்ஸில் 469 ரன்களும், கர்நாடகம் 396 ரன்களும் எடுத்தன.

    பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய செளராஷ்டிர அணி 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 463 ரன்கள் குவித்துள்ளது.

    சேதேஷ்வர் புஜாரா 261 ரன்கள் குவித்து களத்தில் உள்ளார்.

    பஞ்சாப் அதிரடி: ஜாம்ஷெட்பூரில் நடைபெற்று வரும் பஞ்சாபுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் ஜார்க்கண்ட் தனது முதல் இன்னிங்ஸில் 401 ரன்கள் குவித்தது. பின்னர் பேட் செய்த பஞ்சாப் 4-வது நாள் ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 435 ரன்கள் எடுத்துள்ளது. அந்த அணியின் டி.கோலி 151 ரன்களுடன் களத்தில் உள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அரையிறுதியை உறுதி செய்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai