சுடச்சுட

  

  "இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை'

  By dn  |   Published on : 10th January 2013 12:08 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  pawar

  இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமில்லை. எனினும் வளர்ந்து வரும் வீரர்கள் உலகத் தரம் வாய்ந்த வீரர்களாக உருவெடுக்க சில காலம் ஆகும் என்று ஐசிசி மற்றும் பிசிசிஐயின் முன்னாள் தலைவரான சரத் பவார் தெரிவித்தார்.

  தொடர் தோல்விகளால் இந்திய அணி துவண்டு வரும் நிலையில், இது தொடர்பாக அவர் மேலும் கூறியிருப்பது: இந்தியாவில் ஏராளமான திறமையான இளம் கிரிக்கெட் வீரர்கள் உள்ளனர்.

  எனினும் ரோஹித் சர்மா, ரவீந்திர ஜடேஜா போன்ற இளம் வீரர்கள் எதிர்பார்த்த அளவுக்கு சிறப்பாக விளையாடவில்லை. ஒரு காலத்தில் மும்பை, பெங்களூர், சென்னை போன்ற நகரங்களில் இருந்து மட்டும்தான் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவெடுத்தனர்.

  தற்போது உத்தரப் பிரேதசம், ஜார்க்காண்ட் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் சிறந்த கிரிக்கெட் வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அவர்களை சிறந்த வீரர்களாக உருவாக்க கொஞ்ச நாள்கள் ஆகும். இந்தியாவில் சிறந்த கிரிக்கெட் வீரர்களுக்கு பஞ்சமிருப்பதாக நினைக்கவில்லை என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai