சுடச்சுட

  

  இனவெறி: ஹங்கேரி, பல்கேரியா கால்பந்து அணிகளுக்கு அபராதம்

  By dn  |   Published on : 10th January 2013 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  இனவெறியைத் தூண்டும் வகையில் செயல்பட்டதால் ஹங்கேரி, பல்கேரிய கால்பந்து அணிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

  மேலும் இவ்விரு அணிகள் விளையாடவுள்ள உலகக் கோப்பை கால்பந்து போட்டிக்கான தகுதிச்சுற்றின்போது ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் (ஃபிஃபா) அறிவித்துள்ளது.

  கடந்த ஆகஸ்ட் மாதம் ஹங்கேரி-இஸ்ரேல் அணிகளுக்கு இடையிலான நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி நடைபெற்றது. அப்போது ஹங்கேரி அணியின் ஆதரவாளர்கள் சிலர், யூதர்களுக்கு எதிராக இனவெறியைத் தூண்டும் வகையில் பாடல் பாடியதோடு, கேலி செய்யும் வகையிலான சின்னங்களையும் காட்டியுள்ளனர்.

  இதையடுத்து தவறு நடந்ததை ஒப்புக்கொண்ட ஹங்கேரி கால்பந்து சம்மேளனம், அதற்காக வருத்தமும் தெரிவித்திருந்தது. இதுதொடர்பாக விசாரணை நடத்திய ஃபிஃபா ஒழுங்கு நடவடிக்கை ஆணையம், ஹங்கேரி அணிக்கு ரூ.23 லட்சம் அபராதம் விதித்ததோடு, வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள ருமேனியா-ஹங்கேரி இடையிலான உலகக் கோப்பை தகுதிச்சுற்று ஆட்டத்தின்போது ஹங்கேரி ரசிகர்கள் மைதானத்துக்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் அறிவித்துள்ளது. ஃபிஃபாவின் இந்த நடவடிக்கை மிகக் கடுமையானது என்று ஹங்கேரி கால்பந்து சம்மேளனம் தெரிவித்துள்ளது.

  கடந்த அக்டோபரில் நடைபெற்ற டென்மார்க்-பல்கேரிய அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தின்போது பல்கேரிய ஆதரவாளர்கள் இனவெறியைத் தூண்டும் வகையில் டென்மார்க் வீரர் பாட்ரிக்கை திட்டியுள்ளனர்.

  இதையடுத்து வரும் மார்ச் 22-ம் தேதி நடைபெறவுள்ள பல்கேரியா-மால்டா இடையிலான ஆட்டத்தின்போது பல்கேரிய ரசிகர்கள் அனுமதிக்கப்படமாட்டார்கள் என்று அறிவித்துள்ள ஃபிஃபா, பல்கேரிய கால்பந்து சம்மேளனத்துக்கு ரூ.20 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai