சுடச்சுட

  

  கொரிய சூப்பர் சீரிஸ்: 2-வது சுற்றில் சாய்னா, காஷ்யப், சிந்து

  By dn  |   Published on : 10th January 2013 12:09 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  saina

  கொரிய சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால், காஷ்யப், பி.வி.சிந்து ஆகியோர் 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.

  தென் கொரிய தலைநகர் சியோலில் புதன்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் சாய்னா தனது முதல் சுற்றில் 17-21, 21-9, 21-19 என்ற செட் கணக்கில் தாய்லாந்தின் சப்ஸ்ரீயை தோற்கடித்தார். சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சாய்னா அடுத்த சுற்றில் சிங்கப்பூரின் மிங்டியானை சந்திக்கிறார். சாய்னாவும், மிங்டியானும் இதற்கு முன்னர் 3 முறை மோதியுள்ளனர். அவையனைத்திலும் சாய்னாவே வெற்றி கண்டுள்ளார்.

  மற்றொரு இந்திய வீராங்கனையான பி.வி.சிந்து 22-20, 21-16 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் லின்டாவெனி ஃபனேட்ரியை தோற்கடித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதன்மூலம் கடந்த மாதம் நடைபெற்ற சயீத் மோடி கிராண்டப்ரீ போட்டியில் லின்டாவெனியிடம் கண்ட தோல்விக்கு ஆறுதல் தேடிக்கொண்டார் சிந்து. அடுத்த சுற்றில் தாய்லாந்தின் போர்ட்னிப்பை சந்திக்கிறார் சிந்து. போர்ட்னிப்-ஒலிம்பிக் சாம்பியனான சீனாவின் லீ ஸியூரூய் இடையிலான ஆட்டத்தின்போது லீ காயம் காரணமாக போட்டியிலிருந்து விலகியதால் போர்ட்னிப் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். லீ ஸியூரூய் போட்டியிலிருந்து விலகியிருப்பதால் சாய்னா, அரையிறுதியில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ளவரான சீனாவின் தான்ஜியாவ் ஜியாங்கை சந்திக்க வாய்ப்புள்ளது.

  ஆடவர் ஒற்றையர் பிரிவில் பங்கேற்றுள்ள இந்தியாவின் காஷ்யப் தனது முதல் சுற்றில் 21-19, 21-16 என்ற நேர் செட்களில் இங்கிலாந்தின் ராஜீவை தோற்கடித்தார்.

  தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள காஷ்யப், அடுத்த சுற்றில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் யூன் ஹூவை சந்திக்கிறார். யூன் ஹூவை வீழ்த்த காஷ்யப் கடுமையாகப் போராட வேண்டியிருக்கும். இதற்கு முன்னர் இவர்கள் இருவரும் ஒரு முறை மோதியுள்ளனர். அதில் யூன் ஹூ வெற்றி கண்டுள்ளார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai