சுடச்சுட

  

  இந்திய ஒலிம்பிக் சங்க சஸ்பெண்ட் விவகாரம் தொடர்பாக மத்திய விளையாட்டு அமைச்சர் ஜிதேந்திர சிங்குடன் இந்தியாவுக்கான சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில் உறுப்பினர் ரந்திர் சிங் ஆலோசனை நடத்தினார்.

  அப்போது இந்திய ஒலிம்பிக் சங்கம் மீதான இடைக்கால தடையை நீக்க நடவடிக்கை எடுப்பது, சஸ்பெண்ட் காரணமாக இந்திய வீரர், வீராங்கனைகள் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது உள்ளிட்டவை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக மத்திய விளையாட்டுத் துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

  முன்னதாக நிர்வாகிகள் தேர்தலில் மத்திய அரசின் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதாகக் கூறி இந்திய ஒலிம்பிக் சங்கத்தை சஸ்பெண்ட் செய்தது சர்வதேச ஒலிம்பிக் கவுன்சில்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai