சுடச்சுட

  
  saina

  கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் சாய்னா நெவால் (படம்) காலிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

  அதேநேரத்தில் இந்தியாவின் காஷ்யப், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியுள்ளனர்.

  தென் கொரிய தலைநகர் சியோலில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 2-வது நாளான வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சர்வதேச தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சாய்னா 21-16, 21-9 என்ற நேர் செட்களில் இந்தோனேசியாவின் மிங்டியானை தோற்கடித்தார். காலிறுதியில் சீனாவின் லின் ஹானை சந்திக்கிறார் சாய்னா.

  மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து 19-21, 13-21 என்ற நேர் செட்களில் தாய்லாந்தின் போர்ட்னிப்பிடம் தோல்வி கண்டார். ஆடவர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தரவரிசையில் 14-வது இடத்தில் உள்ள இந்தியாவின் காஷ்யப் 21-16, 13-21, 17-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள ஹாங்காங்கின் யூன் ஹூவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai