சுடச்சுட

  

  சென்னை நேரு மைதானத்தில் ரூ.9 கோடியில் சீரமைப்புப் பணிகள் தீவிரம்

  By dn  |   Published on : 11th January 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  stadium

  ஆசிய தட கள விளையாட்டுப் போட்டிக்காக சென்னை ஜவாஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்தில் ரூ.9.2 கோடி செலவில் பல்வேறு சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  தமிழக அரசின் ஆதரவுடன் ஆசிய தட கள விளையாட்டுப் போட்டிகள் வரும் ஆகஸ்ட் மாதம் சென்னையில் நடைபெறும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு அறிவித்தார். இப் போட்டியில் ஆசியக் கண்டத்தில் உள்ள 45 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர். அதற்காக போட்டி நடைபெறவுள்ள சென்னை நேரு மைதானத்தில் சீரமைப்புப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மைதானத்தில் 400 மீ. ஓடுதள பாதையில் புதிய செயற்கை இழை ஓடுதளம் அமைப்பதற்காக ஏற்கெனவே உள்ள பழைய செயற்கை இழை ஓடுதளத்தை அகற்றும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இங்குள்ள கால்பந்து மைதானத்தில் ரூ. 1 கோடி மதிப்பில் புதிய புல்தரைகளை அமைத்தல், மின்னொளி விளக்குகளை மாற்றுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

  மைதானத்தில் உள்ள பழுதடைந்த இருக்கைகளை நீக்கிவிட்டு புதிய இருக்கைகளை அமைத்தல், வெள்ளையடித்தல், கழிவறைகளை சீரமைத்தல், மைதானத்தில் உள்ள அறைகளை புதுப்பித்தல் உள்ளிட்ட பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

  போட்டியின்போது வீரர்கள் பயிற்சி மேற்கொள்வதற்காக நேரு மைதானத்தில் 60 மீ. சுற்றளவு கொண்ட தட கள உள்விளையாட்டரங்கும், நேரு மைதானத்துக்கு பின்புறம் உள்ள அல்லிகுளத்தில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் தட கள ஓடுபாதையும் அமைக்கப்படுகிறது. அதற்காக அல்லிகுளத்தை மூடும் பணிகள் ஓரளவு முடிவடைந்துவிட்டன.

  குளத்தின் கரையில் உள்ள குடிசை வீடுகளை வேறு இடத்துக்கு மாற்றுவதற்கான பணிகளை சென்னை மாநகராட்சி, காவல் துறை, வருவாய்த் துறை ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. அந்தக் குடிசைகள் அகற்றப்பட்டதும் ஓடுதளம் அமைக்கும் பணிகள் தொடங்கும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai