சுடச்சுட

  
  rahul

  இருபது ஓவர் கிரிக்கெட் போட்டியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்று முன்னாள் கேப்டன் ராகுல் திராவிட் தெரிவித்துள்ளார்.

  தொடர் தோல்விகளைத் தொடர்ந்து இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து தோனி விலக வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கூறி வரும் நிலையில், திராவிட் மேலும் கூறியிருப்பது:

  இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் பதவிக்கு சரியான நபர் மட்டுமல்ல, அந்தப் பதவியை வகிக்கத் தேவையான தகுதியைக் கொண்ட ஒரே நபர் தோனி மட்டும்தான். தற்போதைய நிலையில் தோனி தனது கேப்டன்ஷிப்பில் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும். தோனி சிறந்த கேப்டன் என்றாலும், எல்லா நேரத்திலும் அவருடைய உத்திகள் பயனளிக்காது.

  எனவே அவர் அணியில் உள்ள சகவீரர்களிடம் ஆலோசனை கேட்பதோடு, அவர்களின் உதவியையும் ஏற்றுக்கொள்ள வேண்டும். சிறந்த கேப்டன் என்ற அங்கீகாரத்தை பெற்றிருந்தாலும், தொடர்ந்து கேப்டனாக இருக்கவோ, விளையாடவோ முடியாது. ஏனெனில் அது விமர்சனத்துக்கு வழிவகுக்கும். எனவே தோனி இருபது ஓவர் போட்டி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவிகளில் இருந்து விலக வேண்டும். அவருக்கு இப்போது ஓய்வு தேவை.

  அதே நேரத்தில் சிறந்த வீரரான அவர் எல்லாவிதமான போட்டிகளிலும் இந்தியாவுக்காக விளையாட வேண்டும்.

  இருபது ஓவர் போட்டி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் பதவியில் இருந்து விலகும்பட்சத்தில் அவருக்கு நல்ல ஓய்வு கிடைக்கும். களைப்பின்றி இருக்க முடியும்.

  இருபது ஓவர் கேப்டன் பதவியை கோலி போன்ற வீரர்களுக்கு கொடுத்து அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பார்க்கலாம் என்றார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai