சுடச்சுட

  
  kabadi

  தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டியின் 2-வது நாளில் தமிழக பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த பெரும்பாலான அணிகள் வெற்றி கண்டன.

  திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி, தனது முதல் ஆட்டத்தில் 52-1 என்ற புள்ளிக் கணக்கில் ஆந்திர அணியை பந்தாடியது.

  பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 2-வது நாளான வியாழக்கிழமை காலையில் 11 ஆட்டங்கள் நடைபெற்றன. இதில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அணியும், ஆந்திரத்தின் அடிகவி நன்னையா பல்கலைக்கழக அணியும் மோதின. ஆட்டத்தின் தொடக்கம் முதலே மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக வீராங்கனைகளின் ஆக்ரோஷ ஆட்டத்துக்கு ஆந்திர வீராங்கனைகளால் ஈடுகொடுக்க முடியவில்லை. இதனால் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. அணி 52-1 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி கண்டது.

  மற்றொரு ஆட்டத்தில் அழகப்பா பல்கலைக்கழக அணி 40-9 என்ற புள்ளிக் கணக்கில் ஆந்திரத்தின் ஜெ.என். டெக்னாலஜி பல்கலைக்கழக அணியை தோற்கடித்தது.

  கோவை பாரதியார் பல்கலைக்கழக அணி 67-10 என்ற கணக்கில் திருப்பதி பத்மாவதி மகிளா விஷ்வவித்யாலய அணியையும், புதுச்சேரி பல்கலைக்கழக அணி 53-33 என்ற கணக்கில் கர்நாடகத்தைச் சேர்ந்த குவெம்பு பல்கலைக்கழக அணியையும், அன்னை தெரசா பல்கலைக்கழகம் 45-11 என்ற கணக்கில் ஆந்திரத்தின் உஸ்மானியா பல்கலைக்கழக அணியையும், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் 53-28 என்ற கணக்கில் கர்நாடகத்தின் தேவநகரி பல்கலைக்கழக அணியையும், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் 23-12 என்ற கணக்கில் கர்நாடகத்தின் ராணி சன்னம்மா பல்கலைக்கழக அணியையும், மங்களூர் பல்கலைக்கழகம் 49-10 என்ற கணக்கில் ஆந்திரத்தின் கிருஷ்ணா பல்கலைக்கழக அணியையும், கர்நாடக பெண்கள் பல்கலைக்கழகம் 47-32 என்ற கணக்கில் கோழிக்கோடு பல்கலைக்கழக அணியையும், விசாகப்பட்டினம் ஆந்திர பல்கலைக்கழகம் 25-20 என்ற கணக்கில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக அணியையும், தமிழ்நாடு உடற்கல்வியியல் பல்கலைக்கழக அணி 34-30 என்ற கணக்கில் மைசூர் பல்கலைக்கழக அணியையும் தோற்கடித்தன.

  2-வது நாள் ஆட்டத்தைப் பொறுத்தவரையில் தமிழக அணிகளே ஆதிக்கம் செலுத்தின.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai