சுடச்சுட

    
    tend

    பதினான்கு வயதுக்குட்பட்டோருக்கான மும்பை கிரிக்கெட் அணிக்கு மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பிசிசிஐ சார்பில் 14 வயதுக்குட்பட்டோருக்கான மேற்கு மண்டல கிரிக்கெட் போட்டி வரும் 20 முதல் பிப்ரவரி 1 வரை குஜராத் மாநிலம் ஆமதாபாதில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்கவுள்ள மும்பை அணியில் அர்ஜுன் இடம்பிடித்துள்ளார்.

    முன்னதாக ஜிம்கானா அணி சார்பில் விளையாடிய அர்ஜுன், குர்காவ்ன் அணிக்கெதிரான ஆட்டத்தில் 124 ரன்கள் குவித்திருந்தார். இதன்மூலம் இப்போது மும்பை அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    தற்போது 13 வயதை எட்டியுள்ள அர்ஜுன், இடது கை பேட்ஸ்மேன் மட்டுமல்ல, இடது கை வேகப்பந்து வீச்சாளரும்கூட. பள்ளிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியில் 22 ரன்களை கொடுத்து 8 விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் மும்பையில் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்கள் வட்டாரத்தில் பிரபலமானவர்.

    1999-ம் ஆண்டு செப்டம்பர் 24-ம் தேதி பிறந்த அர்ஜுன், அடிக்கடி தனது தந்தை சச்சினின் ஆட்டத்தைப் பார்த்து ரசிப்பதற்காக மைதானத்துக்கு செல்லக்கூடியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai