சுடச்சுட

  

  ரஞ்சி கிரிக்கெட்: மும்பை, பஞ்சாப், செளராஷ்டிரம் வெற்றி

  By dn  |   Published on : 11th January 2013 12:46 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் காலிறுதி ஆட்டங்களில் மும்பை, பஞ்சாப், செளராஷ்டிரம் அணிகள் முதல் இன்னிங்ஸ் முன்னிலை அடிப்படையில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தன.

  வரும் 16-ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்கும் அரையிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிர அணி, பஞ்சாபை சந்திக்கிறது. அதே தேதியில் தில்லியில் தொடங்கும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் மும்பை அணி, சர்வீசஸ் அணியை எதிர்கொள்கிறது.

  ஜாம்ஷெட்பூரில் நடைபெற்ற பஞ்சாபுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் ஜார்க்கண்ட் அணி 401 ரன்கள் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய பஞ்சாப் அணி 229 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 699 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பஞ்சாப் அணியில் டி.கோலி ஆட்டமிழக்காமல் 300 ரன்கள் குவித்தார். பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய ஜார்க்கண்ட் ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்தது.

  மும்பையில் நடைபெற்ற பரோடாவுக்கு எதிரான காலிறுதி ஆட்டத்தில் மும்பை தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 645 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது. பின்னர் ஆடிய பரோடா 271 ரன்களில் ஆட்டமிழந்தது. இதையடுத்து 2-வது இன்னிங்ûஸ ஆடிய மும்பை 6 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய பரோடா ஆட்டநேர முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் எடுத்தது.

  செüராஷ்டிரம் 718/9: மற்றொரு காலிறுதியில் முதல் இன்னிங்ஸில் செளராஷ்டிரம் 469 ரன்களும், கர்நாடகம் 396 ரன்களும் எடுத்தன.

  பின்னர் 2-வது இன்னிங்ûஸ ஆடிய செளராஷ்டிரம் ஆட்டநேர முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 718 ரன்கள் குவித்தது. சேதேஷ்வர் புஜாரா 352 ரன்களும், ஜாக்சன் 117 ரன்களும் குவித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai