சுடச்சுட

    

    அதிருப்தி டென்னிஸ் வீரர்களிடம் பேச்சு நடத்த சிறப்புக் குழு

    By dn  |   Published on : 12th January 2013 11:46 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    டேவிஸ் கோப்பையில் விளையாட மறுத்துவிட்ட டென்னிஸ் வீரர்களின் கோரிக்கை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த சிறப்புக் குழுவை அமைக்க அகில இந்திய டென்னிஸ் சங்கம் (ஏஐடிஏ) முடிவு செய்துள்ளது.

    ஓய்வுபெற்ற நீதிபதி அல்லது அதற்கு இணையான அரசு அதிகாரி தலைமையில் இந்த சிறப்பு குழு அமைக்கப்படவுள்ளது. இந்த திட்டத்தை ஏஐடிஏ தலைவர் அனில் கன்னா கொண்டு வந்துள்ளார்.

    பிப்ரவரி 3-ம் தேதி நடைபெறவுள்ள ஏஐடிஏ செயற்குழு கூட்டத்தின்போது சிறப்புக் குழு அமைக்கப்படுகிறது.

    இந்தக் குழு, எதிர்ப்பு வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை டேவிஸ் கோப்பையில் விளையாட வைப்பதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ளும் என்று ஏஐடிஏ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சோம்தேவ் உள்ளிட்ட 11 வீரர்கள் வரும் பிப்ரவரி 1 முதல் 3 வரை தில்லியில் நடைபெறவுள்ள தென் கொரியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை போட்டியில் இருந்து விலகிவிட்டனர்.

    அவர்களின் கோரிக்கைகளில் சிலவற்றை டென்னிஸ் சங்கம் ஏற்றபோதும், அனைத்து கோரிக்கைகளும் ஏற்கப்பட வேண்டும் என்ற தங்களின் நிலைப்பாட்டில் வீரர்கள் உறுதியாக இருந்துவிட்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai