சுடச்சுட

  

  ஊக்கமருந்து உட்கொண்டதை ஒப்புக்கொள்கிறார் ஆம்ஸ்ட்ராங்?

  By dn  |   Published on : 12th January 2013 11:45 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt6

  பிரபல சைக்கிள் பந்தய வீரரான லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் ஊக்கமருந்து உட்கொண்டதை வரும் திங்கள்கிழமை ஒப்புக்கொள்ளவிருப்பதாக செய்தி வெளியாகியுள்ளது.

  இது தொடர்பாக அமெரிக்காவைச் சேர்ந்த "யு.எஸ்.ஏ. டுடே' என்ற இணையதளத்தில் கூறப்பட்டிருப்பதாவது:

  "அமெரிக்காவைச் சேர்ந்த ஓ.டபிள்யூ.என். டிவி நெட்வொர்க் உரிமையாளரான ஓப்ரா வின்பிரே என்பவருக்கு வரும் திங்கள்கிழமை லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் பேட்டியளிக்கிறார். அப்போது தனது சைக்கிள் பந்தய வாழ்க்கையின்போது ஊக்கமருந்து உட்கொண்டதை ஆம்ஸ்ட்ராங் ஒப்புக்கொள்கிறார்' என்று அது தொடர்பாக விஷயமறிந்த ஒருவர் தெரிவித்ததாக இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

  அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தின் ஆஸ்டின் நகரில் உள்ள ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டில் வைத்து அவரிடம் பேட்டி எடுக்கிறார் வின்பிரே.

  புற்றுநோயால் பாதிக்கப்பட்டவரான லான்ஸ் ஆம்ஸ்ட்ராங் அதிலிருந்து மீண்டு, பிரபல சைக்கிள் பந்தய போட்டியான டூர் பிரான்ஸ் போட்டியில் 7 முறை பட்டம் வென்ற பெருமைக்குரியவர். எனினும் ஊக்கமருந்து பயன்படுத்தியது கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த அக்டோபரில் அவரின் பதக்கங்கள் பறிக்கப்பட்டன. அதன்பிறகு இப்போது முதல்முறையாக பேட்டியளிக்கவுள்ளார் ஆம்ஸ்ட்ராங்.

  இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தபோது ஆம்ஸ்ட்ராங்கின் புத்தகத்தைப் படித்து உத்வேகம் பெற்றதாக தெரிவித்திருந்தார். யுவராஜ் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது, அவரை ஆம்ஸ்ட்ராங் நேரில் சென்று சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai