சுடச்சுட

    
    saina

    கொரிய ஓபன் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியின் காலிறுதியில் இந்தியாவின் சாய்னா நெவால் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார்.

    தரவரிசையில் 3-வது இடத்தில் உள்ள சாய்னா 14-21, 21-15, 12-21 என்ற செட் கணக்கில் தரவரிசையில் 26-வது இடத்தில் உள்ள சீனாவின் லீ ஹனிடம் அதிர்ச்சி தோல்வி கண்டார். இதற்கு முன்னர் லீ ஹனுடன் மோதிய இரு முறையும் வெற்றி கண்டிருந்த சாய்னா, இந்த முறை சற்றும் எதிர்பாராத வகையில் தோல்வியடைந்தார்.

    இதன்மூலம் கொரிய ஓபனில் இந்தியர்களின் ஆட்டம் முடிவுக்கு வந்தது. முன்னதாக இந்தியாவின் காஷ்யப், பி.வி.சிந்து ஆகியோர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி கண்டது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai