சுடச்சுட

  

  தென்னிந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மகளிர் கபடி போட்டியின் காலிறுதியில் மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக அணி தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறியது.

  நெல்லை பல்கலைக்கழக அணி 17-30 என்ற கணக்கில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக அணியிடம் தோல்வி கண்டது. பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்று வரும் இப் போட்டியில் 3-வது நாளான வெள்ளிக்கிழமை மாலையில் காலிறுதி ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் அன்னை தெரசா பல்கலைக்கழக அணியும், சென்னைப் பல்கலைக்கழக அணியும் மோதின. இந்த ஆட்டத்தை பல்கலைக்கழங்களுக்கு இடையிலான கபடிப் போட்டி பார்வையாளர் முனைவர் எஸ்.எம். பிரகாஷ் தொடங்கிவைத்தார்.

  ஆட்டத்தின் தொடக்கம் முதலே அன்னை தெரசா பல்கலைக்கழக அணி வீராங்கனைகள் ஆதிக்கம் செலுத்தினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் அந்த அணி 21-10 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தது. இறுதியில் கொடைக்கானல் அணி 40-15 என்ற கணக்கில் வெற்றி கண்டு அரையிறுதிக்கு முன்னேறியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai