சுடச்சுட

  

  தேசிய டேபிள் டென்னிஸ்: தமிழக வீராங்கனை ஷாமினி சாம்பியன்

  By dn  |   Published on : 12th January 2013 11:35 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt2

  தேசிய டேபிள் டென்னிஸ் போட்டியின் மகளிர் பிரிவில் தமிழக வீராங்கனை ஷாமினி சாம்பியன் பட்டம் வென்றார்.

  74-வது தேசிய டேபிள் டென்னிஸ் போட்டி சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் நடைபெற்றது.

  இதில் சனிக்கிழமை நடைபெற்ற மகளிர் இறுதி ஆட்டத்தில் ஷாமினி 14-12, 11-9, 9-11, 11-4, 11-8 என்ற செட் கணக்கில் மேற்கு வங்கத்தின் பெüலோமி காடக்கை வீழ்த்தினார். இதன்மூலம் கடந்த முறை பெüலோமியிடம் கண்ட தோல்விக்கு ஆறுதல் தேடிக்கொண்டார் ஷாமினி.

  ஷாமினிக்கு கோப்பையுடன் ரூ.1.45 லட்சம் ரொக்கப் பரிசும் கிடைத்தது.

  இளம் சாம்பியன்: ஆடவர் பிரிவு இறுதி ஆட்டத்தில் மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்தவரும், லண்டன் ஒலிம்பிக்கில் பங்கேற்றவருமான செüம்யஜித் கோஷ் 3-11, 11-5, 5-11, 11-8, 11-6, 11-7 என்ற செட் கணக்கில் தமிழகத்தின் அஜந்தா சரத் கமலை தோற்கடித்தார்.

  19 வயதான செüம்யஜித் இந்த வெற்றியின் மூலம் இளம் தேசிய சாம்பியன் என்ற பெருமையையும் பெற்றார். அவருக்கு கோப்பையுடன் ரூ.2.30 லட்சம் பரிசுத்தொகையும் கிடைத்தது.

  ஆடவர் இரட்டையர் பிரிவு: ஆடவர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் செüரவ் சக்கரவர்த்தி-சத்தியன் ஜோடி 11-5, 11-5, 12-10 என்ற செட் கணக்கில் அமன் பல்கு-நீல் பின்டோ ஜோடியை வீழ்த்தியது.

  மகளிர் இரட்டையர் இறுதி ஆட்டத்தில் கே.ஸ்பூர்த்தி-நிகத் பானு ஜோடி 14-12, 3-11, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் மாதுரிகா பட்கர்-பூஜா ஜோடியை வீழ்த்தியது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai