சுடச்சுட

  

  ரஞ்சி கிரிக்கெட்: சச்சின் கோரிக்கையை நிராகரித்தது பிசிசிஐ

  By dn  |   Published on : 12th January 2013 11:38 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  spt5

  மும்பை-சர்வீசஸ் அணிகள் மோதவுள்ள ரஞ்சி கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி ஆட்டத்தை தில்லியில் இருந்து மும்பைக்கு மாற்ற வேண்டும் என்று சச்சின் டெண்டுல்கர் விடுத்த கோரிக்கையை நிராகரித்துவிட்டது பிசிசிஐ.

  இவ்விரு அணிகளுக்கு இடையிலான அரையிறுதி ஆட்டம் வரும் 16-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை தில்லியில் நடைபெறவுள்ளது.

  தற்போது மும்பை அணிக்காக விளையாடி வரும் சச்சின், போட்டியை மும்பைக்கு மாற்றுமாறு கோரியிருந்தார். ஆனால் விதிமுறைப்படி போட்டியை அப்படி மாற்ற இயலாது.

  அதனால் சச்சின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுவிட்டது என்று பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

  ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஒவ்வொரு அணியும் தங்களுடைய சொந்த ஊர் மற்றும் எதிரணியின் சொந்த ஊரில் தலா ஒரு போட்டியில் பங்கேற்க வேண்டும்.

  அதன்படி தற்போது அரையிறுதியை நடத்தும் வாய்ப்பு சர்வீசஸ் அணிக்கு வழங்கப்பட்டுள்ளது.

  முன்னதாக இவ்விரு அணிகளும் 1964-65-ல் நடைபெற்ற அரையிறுதி போட்டியில் மோதியுள்ளன. அந்தப் போட்டி மும்பையில் நடைபெற்றது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai